
பிரேசில் நாட்டில் மிகவும் பிரபலமான நகரங்களில் ஒன்று சா பாலோ. அந்த நகரத்தில் உள்ள உணவு விடுதியில் நேற்று 38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாப்பிட வந்தார்.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த மேசையின் மீதே மயங்கி விழுந்தார்.
சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் திடீரென மேசையின் மீது மயங்கி விழுந்ததை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த உணவு விடுதியில் பணியாற்றும் வெயிட்டர் உடனடியாக ஓடி வந்து அவருக்கு முதலுதவி செய்தார்.
பின்னர், அந்த நகரத்தின் போலீசாரும் அவருக்கு முதலுதவி அளித்தார். இருவரும் மாறி, மாறி அளித்த முதலுதவி காரணத்தால் மயங்கிய அந்த நபர் சட்டென்று கண்விழித்தார்.
பின்னர், அவரை அங்கு அமரவைத்து தண்ணீர் அளித்து அருகில் இருந்த நபர்கள் ஆசுவாசப்படுத்தினர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகளை குட்நியூஸ் கரெஸ்பாண்டன்ட் என்ற டுவிட்டர்வாசி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.