ரூபிக் க்யூப் இல் 5 வயது சிறுமி உலக சாதனை!

kothai - 2026

சென்னையை சேர்ந்த கௌசல்யா – பிரபு தம்பதிகளின் மகளான கோதை வாஹ்ருணி முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயது முதலே கதைகள் கேட்பது, புதிர் போடுவதை அதை விடுவிப்பது, கணிதம் உள்ளிட்டவற்றில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார் கோதை. பெரியவர்களே விடைகண்டறிய திணறும் 9*9 சுடோகு விளையாட்டை 5 வயதிலேயே சுலபமாக முடித்துள்ளார்.

இந்த திறனை கண்டறிந்த இவரது பெற்றோர்கள் சுடோகு போல் உள்ள ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஆர்வத்துடன் விளையாடத்தொடங்கிய கோதை அதில் வல்லுனராகவும் ஜொலிக்க தொடங்கியுள்ளார். இந்த விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சியை தொடங்கிய கோதையின் சாதனை பயணம் இன்று கின்னஸ் உலக சாதனை வரை நீண்டுகொண்டிருக்கிறது.

பல கோணங்கள், பல வண்ணங்களில் இருக்கும் ரூபிக் கனசதுரத்தை தனது மாயஜால விரல்களால் அசால்டாக வரிசைப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படவைக்கிறார் கோதை.

குறிப்பாக ஹூலா ஹூபிங் எனப்படும் சாகச வளையத்தை இடுப்பில் சுற்றிக்கொண்டே டெட்ராஹெட்ரான் எனப்படும் முக்கோண வடிவ ரூபிக் கனசதுரத்தை 6.88 நொடிக்குள் வரிசைப்படுத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

kothai1 - 2026

18 வயது இளைஞர் 13.86 நொடியில் நிகழ்த்திய சாதனையை கோதை 6.88 நொடியில் செய்து காண்பித்து சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளார்.

அம்மா, அப்பா மூலம் அறிமுகமான ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டை தனது ஆர்வத்தால் யூ டியூபில் கற்றுத்தேர்ந்து இன்று கின்னஸ் சாதனை வரை பயணப்பட்டுள்ளார் கோதை.

மேலும் மாஸ்டர்மார்பிக்ஸ் எனப்படும் மிகக்கடினமான ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டை ஹூலா ஹூபிங் செய்துகொண்டே 1 நிமிடம் 59 நொடிக்குள்ளும், மெகாமின்க்ஸ் எனப்படும் 8 பக்கம் கொண்ட கனசதுரத்தை 3.3 நிமிடத்தில் செய்துமுடித்து மேலும் இரண்டு உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இவரது திறமையை அங்கீகரிக்குக் விதமாக தமிழ்நாடு கியூப் சங்கம் பதக்கமும், சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளது.

செல்போன், டிவி என மின்னணு சாதனத்தில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளின் ஆர்வத்தை திசைதிருப்பி அந்த சாதனங்களை பயனுள்ளவகையில் பயன்படுத்த கற்றுக்கொடுத்தால் கோதையை போல் சாதனையாளர்களை நாமும் உருவாக்கலாம் என பொற்றோர்களுக்கு பாடம் புகட்டியுள்ளார் இந்த சாதனை சிறுமி கோதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories