மொபைலில் நமக்கு பிடித்த தீம்ஸ், பேக்கிரவுண்ட் புகைப்படம், ரிங்டோன் என்று விருப்பப்படி மாற்றக்கூடிய அம்சங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்வது வழக்கம்.
பலருக்கும் தங்கள் அதிகம் விரும்பும் பாடல்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ள மிகவும் பிடிக்கும். ஒரு சிலர், கான்ட்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரிங்டோனை அமைக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர்.
இந்த விதவிதமான ரிங்டோன்களை எளிதாக டவுன்லோடு செய்வது எப்படி என்று பலரும் தேடி வருகின்றனர். எவ்வளவு தேடினாலும், சில ரிங்டோன்கள் கிடைக்கவே கிடைக்காது.
அந்த நேரத்தில், பெரும்பாலனவர்கள் யுடியூப் mp3 கன்வர்ட்டர் பயன்படுத்தி, வீடியோக்களை ஆடியோவாக மாற்றி, ஆடியோ கட்டரைப் பயன்படுத்தி ரிங்டோனாக மாற்றி வருகின்றனர்.
சில நேரங்களில், காப்புரிமைக் காரணமாக வீடியோக்களில் விளம்பரங்கள் தடையாக இருக்கும். எந்த டவுன்லோடு கருவிகளையும் பயன்படுத்தாமல் நேரடியாக ரிங்டோனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் MP3 Ringtones Download portal வழியே நேரடியாக ரிங்டோனை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யலாம். நீங்கள் விரும்பும் வீடியோவை ரிங்டோன் ஃபார்மட்டில் பதிவிறக்கலாம்.
கன்வர்ட்டர்கள் தேவை இன்றி, வீடியோவைக் கிளிக் செய்யும் போது அதிலே நேரடியாக ரிங்டோனாக டவுன்லோடு செய்யும் ஆப்ஷன் இருக்கிறது.
சப்போர்ட் செய்யும் பிரவுசரில் https://mp3ringtonesdownload.net/ லின்க்கை திறக்கவும். நீங்கள் ரிங்டோனாக அமைக்க விரும்பும் பாடலை Search ஆப்ஷனில் தேடவும். இந்த தளத்தில் இன்-பில்ட் mp3 பிளேயர் இருப்பதால், நீங்கள் டவுன்லோடு செய்யும் முன்பே பாடலைக் கேட்கலாம்.
டவுன்லோட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் வீடியோவை ரிங்டோனாக உங்கள் மொபைலில் நேரடியாக பதிவிறக்கலாம். டவுன்லோடு செய்யபப்ட்ட ரிங்டோன், உங்கள் மொபைலின் ஃபைல் மேனேஜரில் ‘டவுன்லோடு’ ஃபோல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும்.
ஆண்ட்ராய்டு மொபைல்கள் வருவதற்கு முன்பிருந்தே, Zedge பல ஆண்டுகளாக மொபைல் வால்பேப்பர் மற்றும் ரிங்டோன்களை வழங்கி வருகிறது.
சில ஆண்டுகள் மும்பு வரை இணையத்தளமாக மட்டுமே இருந்த Zedge, தற்போது மொபைல் செயலியாக பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
நீங்கள் இந்த செயலியை இலவசமாக பயன்படுத்தலாம் அல்லது கட்டணம் செலுத்தி ப்ரீமியம் வெர்ஷனையும் பயன்படுத்தலாம்.
- கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Zedge டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும்.
- செயலிக்கு தேவைப்படும் அனுமதிகளைக் கொடுக்கவும்.
- உங்கள் திரையில் தோன்றும் ஹாம்பர்கர் சின்னம் மீது கிளிக் செய்து, ‘Ringtones’ என்பதைத் தேர்வு செய்யவும்.
- பின்னர், நீங்கள் விரும்பும் ரிங்டோனை தேடவும்.
நீங்கள் தேடிய ரிங்டோன் கிடைத்தவுடன், ஃபைலை திறந்து, டவுன்லோடு பட்டனைக் கிளிக் செய்யவும். - பாப்-அப் ஆகும் மெனுவில், ‘Set Ringtone’ என்ற ஆப்ஷன் தோன்றும். நீங்கள் அந்த ஆடியோவை உங்கள் மொபைல் ரிங்டோனாக நேரடியாக அமைக்கலாம்.
மேற்கூறிய இரண்டு தேர்வுகளையுமே இலவசமாகப் பயன்படுத்தலாம்.