Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஅடடே... அப்படியா?பயிற்சி முடிந்து உறுதிமொழி ஏற்று பணிக்கு கிளம்பிய 132 வீரர்கள்!

பயிற்சி முடிந்து உறுதிமொழி ஏற்று பணிக்கு கிளம்பிய 132 வீரர்கள்!

- Advertisement -
- Advertisement -
miltry 1
miltry 1

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது.

அங்கு பயிற்சியை பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுபவர்கள். மொத்தமாக 46 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும்

இந்நிலையில், அனைத்து விதமான பயிற்சி முடித்த, இளம் பயிற்சி ராணுவ வீரர்கள் 132 பேர் ராணுவ வீரர்களாய் பணிபுரிய சத்தியபிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி குன்னூர் வெலிங்டன் ராணு பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீதும், உப்பு உட்கொண்டும் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது.

பயிற்சி வீரர்களின் கம்பீரமான அனுப்பி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட, பிரிகேடியர் இராஜேஸ்வர் சிங் வெலிங்டன், 10 சிறந்த வீரர்கள் மற்றும் பயிற்சி அளித்த இராணுவ அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

பயிற்சியை முடித்த 132 ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சியில் உயர் ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்று காரணமாக இளம் வீரர்களின் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை

- Advertisement -