December 8, 2024, 8:36 PM
27.5 C
Chennai

உங்கள் ஆதாருடன் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என அறிய..!

Ko

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாகக் கருதப்படுகிறது.

புதிய சிம் வாங்க வேண்டும் என்றால் நிச்சயமாக இந்தியக் குடிமக்கள் அவர்களின் ஆதார் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பரிந்துரைக்கிறது.

இப்படி உங்கள் ஆதார் எண் மூலமாக இதுவரை எத்தனை தொலைப்பேசி எண்கள் பதிவு செய்யப்பட்டு வாங்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த சேவைக்குப் பெயர் தான் TAFCOP.

ஆதார் எண்ணுடன் எத்தனை தொலைப்பேசி எண்கள் அல்லது எத்தனை சிம் கார்டுகள் இணைக்கப்பட்டுள்ளது?
இந்த சேவையைப் பயன்படுத்தி மக்கள், அவர்களின் ஆதார் எண்ணுடன் எத்தனை தொலைப்பேசி எண்கள் அல்லது புது சிம் கார்டு இணைப்புகள் வாங்கப்பட்டுள்ளது என்பதைச் சரிபார்த்துக்கொள்ள இந்த சேவை இப்போது உங்களை அனுமதிக்கிறது.

முன்பு சில பகுதிகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இந்த சேவை இப்போது அதிக இடங்களில் கிடைக்கும் படி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழக வட்டத்திலும் இது விரைவில் கிடைக்கவுள்ளது. இந்த TAFCOP போர்டல் மூலம் ஆதார் பயன

ர்களின் அட்டையைப் பயன்படுத்தி எத்தனை மொபைல் எண்கள் வாங்கப்பட்டிருக்கிறது என்பதை எப்படிச் சரி பார்ப்பது என்று இப்போது பார்க்கலாம்.

மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான தொலைத்தொடர்பு பகுப்பாய்வு (TAFCOP) போர்டல் மூலம் உங்களை அடையாள அட்டையைப் பயன்படுத்தி எத்தனை மொபைல் எண்கள் பயன்பாட்டில் உள்ளது என்பதை நீங்கள் இனி நொடியில் அறிந்துகொள்ள முடியும்.

ALSO READ:  தென்கரை கோயிலில் சூரசம்ஹாரம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இதில் சிறப்பு என்னவென்றால், நீங்கள் பயன்படுத்தாத எண்கள் அல்லது இனி நீங்கள் பயன்படுத்தப்போவதில்லை என்று கருதும் எண்களைப் புகார் அளித்து அவற்றின் பயன்பாட்டைத் தடை செய்யலாம்.

ஸ்மார்ட்போன்களை மக்கள் ஒரு வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது 3 வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது அதற்கும் மேலான வருடங்களுக்குப் பின்னரே மாற்றம் செய்கின்றனர். ஆனால், சிம் கார்டு என்பது அப்படிப் பயன்படுத்தப்படவில்லை. உண்மையைச் சொன்னால், இந்தியாவில் மக்கள் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகையைப் பொறுத்து நெட்வொர்க்குகளை அடிக்கடி மாற்றம் செய்து வருகின்றனர்.

இந்த பழக்கத்தினால், மக்களிடம் அனைத்து நெட்வொர்க்கிற்குமான சிம் கார்டுகளையும் வைத்துள்ளனர் என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.

குறைந்தது ஒரு பயனர் இரண்டு சிம் கார்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. புதிய சிம் கார்டுகளை வாங்கும் போது, பயனர்கள் அவர்களின் அடையாள அட்டையைச் சமர்ப்பித்து புது சிம் வாங்குவது கட்டாயம்.

இப்படி போலி சிம்கார்டுகள் மற்றும் வேறொருவர் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி சிம் கார்டுகளை வாங்குவது முன்பு அதிகமாக இருந்தது.

சட்டத்திற்குப் புறம்பான சில காரியங்களைச் செய்யும் சமூகவிரோதிகள் தங்களின் அடையாளம் வெளிப்படாமல் இருக்க, இதுபோன்ற போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கும் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த தவறான செயல்களைக் கட்டுப்படுத்தவே eKYC நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறை செயல்பாட்டிற்கு வந்த பின்னர் யாருடைய ப்ரூப்பை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினாலும், அவற்றை நாம் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

இதைச் செய்ய இப்போது உங்களுக்கு TAFCOP இணையதளம் உதவுகிறது. உங்கள் ஆதார் கார்டைப் பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டது. அதில் எத்தனை இயக்கத்தில் உள்ளது போன்ற சிம் கார்டு தகவல்களை நீங்கள் TAFCOP இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ:  மகாகவி பாரதியார் தீபாவளி பற்றி எழுதிய கட்டுரை

உங்கள் ஆதார் விவரத்துடன் காண்பிக்கப்படும் மொபைல் எண்களில் நீங்கள் பயன்படுத்தாத எண்கள் இருந்தால் அதனை முறையாகப் புகார் அளித்து, அவற்றை நீக்கம் செய்யலாம்.

இந்த TAFCOP இணையதள சேவையைப் பயன்படுத்தி எப்படி உங்கள் ஆதார் அட்டையுடன் செயல்பாட்டில் இருக்கும் சிம் கார்டு விபரங்களைத் தெரிந்துகொள்வது என்று பார்க்கலாம்.

இதைச் சரியாக நீங்கள் கீழே வரும் செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைப்பில் இருக்கும் சிம் கார்டு எண்களை தெரிந்துகொள்ள முதலில்,

நீங்கள் TAFCOP சேவையை வழங்கும் https://tafcop.dgtelecom.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
மொபைல் எண் மற்றும் OTP எண் கட்டாயம்

TAFCOP முகப்பு பக்கத்துக்குச் சென்றவுடன், உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து Request OTP பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் டைப் செய்து அனுப்பிய உங்களின் மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பாஸ்வோர்டு எண்களான OTP எண் மெசேஜ்ஜாக வந்து வெறும்.

இப்போது OTP பக்கத்தில் உங்களுக்கு அனுப்பப்பட்ட OTP எண்களைச் சரியாகப் பதிவிட்டு Validate பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.பட்டியலில் காண்பிக்கப்படும் அனைத்து எண்களையும் கவனமாகச் சரி பாருங்கள்

சரியான OTP எண்களை உள்ளிட்ட பின்னர் உங்கள் ஆதார் விவரங்களுடன் வழங்கப்பட்ட மொபைல் எண்களின் பட்டியல் காண்பிக்கப்படும்.
உங்களுக்குக் காண்பிக்கப்படும் அனைத்து எண்களையும் கவனமாகச் சரி பாருங்கள், நீங்கள் பயன்படுத்தாத எண்கள் அல்லது சந்தேகத்துக்குரிய எண்கள் பட்டியலில் காணப்பட்டால் அவற்றை நீக்கம் செய்ய உடனடியாக தொலைத்தொடர்புத் துறைக்குத் தெரிவிக்கலாம்.

ALSO READ:  உலக இதய தினம்: மதுரையில் வாக்கத்தான் - விழிப்புணர்வு பேரணி!

நீங்கள் பயன்படுத்தாத எண்களுக்கு அருகில் காணப்படும் checkbox ஐகானை கிளிக் செய்து Not required என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.
இறுதியாக, Report என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் புகாரைப் பதிவு செய்யுங்கள்.

பின்னர் நீங்கள் புகார் அளித்த மொபைல் எண் உங்கள் ஆதாரில் இருந்து நீக்கம் செய்யப்படும்.
இது ஒரு இலவச சேவை என்பதனால் ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்

இந்த TAFCOP சேவையின் மூலம் உங்கள் ஆதார் அட்டை விபரங்களைப் போலியாகப் பயன்படுத்தி வேறு யாரும் உங்களுக்கே தெரியாமல் சிம் கார்டு வாங்கி பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனரா என்பதை சில நொடியில் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

அப்படி உங்களுக்குத் தெரியாத எண்கள் பட்டியலில் இருந்தால் அது போலியான அடையாள முகவரி மூலம் வாங்கப்பட்ட சிம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவற்றை உடனடியாக உங்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப் புகார் அளியுங்கள். இது ஒரு இலவச சேவை என்பதனால், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஒரு முறை செக் செய்து பாருங்கள்.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week