மகளுக்கு ஜடை போடும் தந்தை! வைரலான உன்னிகிருஷ்ணனின் வீடியோ!

uthra unnikrishnan - 2026

தனது 12 வயதிலேயே கர்நாடக இசையை கற்று தேர்ந்து, தென்னிந்திய சினிமாவின் பிரபலமான பாடகராக வலம் வருபவர் உன்னி கிருஷ்ணன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி பாடகாரக கலக்கி வருகிறார். குறிப்பாக இவரது குரலில் வெளியாகும் பக்தி பாடல்களை கேட்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு.

கேரளாவை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும் உன்னி கிருஷ்ணனின் தமிழ் உச்சரிப்புகள் அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

இசையுலகில் கலைமாமணி விருது, இசைப் பேரொளி, யுவபாரதி, இசைச் செல்வம், சங்கீத கலாசாரதி , சங்கீத சக்கரவர்த்தி என பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.

இவருக்கும் பரதநாட்டியம் மற்றும் மோகினி ஆட்ட கலைஞரான கேரளாவைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும் 1994ம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இந்த தம்பதிக்கு வாசுதேவ கிருஷ்ணன் என்ற மகனும் உத்ரா என்ற மகளும் உள்ளனர்.

உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ரா சைவம் படத்தில் முதன் முறையாக பாடிய “அழகு” என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். பிசாசு, தெறி, லக்ஷ்மி போன்ற படங்களிலும் பாடியுள்ளார்.

unnikrishnan - 2026

பாடகராக பிசியாக வலம் வரும் உன்னி கிருஷ்ணன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் ஜட்ஜாக வருகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 10வது சீசன் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜட்ஜாக கலக்கி வரும் பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மகளுக்காக செய்த அழகிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் டி.வி. பிரபலங்கள் பலரைப் போலவும் உன்னி கிருஷ்ணனும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது மகளுடன் உன்னிகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள க்யூட் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் முதல் முறையாக தனது மகள் உத்ராவிற்கு, பாடகர் உன்னி கிருஷ்ணன் ஜடை பின்னி விடுகிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்க்குகளை குவித்து வருகின்றனர்.

அத்துடன் “எங்கள் பெற்றோருக்குரிய பாணிகள் வேறுபட்டவை, ஆனால் சில கலாச்சார மரபுகள் பல ஆண்டுகளாக நம்மிடையே கடந்து வந்துள்ளன. யாரோ ஒருவரின் தலைமுடியை ஒருவர் பின்னுவது என்பது புதிதானது அல்ல.

ஆனால் எனக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது, அதுவும் என் மகளுக்கு நான் அதைச் செய்யும்போது, ​​அது மிகவும் வேடிக்கையாகவும் முழுமையான மகிழ்ச்சியாகவும் இருந்தது!!! எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories