எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கன்னியாகுமரி மாட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த 33 மீனவர்களை சீசெல்சு நாட்டு கடற்படையினர் இன்று சிறைபிடித்தனர். மீனவர்களை கைது செய்த கடற்படையினர் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக குமரி மீனவர்கள் 8 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 33 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.இவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.





