காட்டில் வேட்டையாடுவதுடன். சிறுத்தை நீர்வாழ் உயிரினங்களையும் தனது இரையாக ஆக்குகிறது.
அந்த வகையில் தண்ணீருக்குள் சென்று முதலையை தனது இரையாக்கும் சிறுத்தை ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்தியாகி வரும் இந்த வீடியோவில், ஆற்றின் கரையோரம் சிறுத்தை நடந்து செல்வதைக் காணலாம்.
மேட்டில் அமர்ந்திருக்கும் முதலையின் மீது பார்வை விழுகிறது. சிறுத்தை தண்ணீரில் நீந்தி பின்னால் இருந்து முதலையை நோக்கி நகர்கிறது.
நெருங்கி சென்றவுடன், அது முதலையின் மீது பாய்கிறது. படிப்படியாக, தனது முழு பலத்தையும் பிரயோகித்து அதனை இரையாக்குகிறது.
ஜாகுவார் மற்றும் முதலையின் இந்த வீடியோ நேஷனல் ஜியோகிராஃபிக் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 6 கோடியே 14 லட்சத்துக்கும் அதிகமானோர் இதனை பார்த்துள்ளனர்.