Mouse deer 1 - 2026

நீலகிரியில் உலா வந்த சுண்டெலி வடிவ மான்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
Mouse deer 1 - 2026

வெளிறிய இலவங்கப்பட்டை ரோமங்களுடன் பெரிய சுண்டெலி போன்ற தோற்றத்தில் இருக்கக்கூடியது சுலெவின் சுண்டெலி.

இந்த உயிரினம் கேடலினா என்ற வகையை சேர்ந்த சுண்டெலி மான் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தெற்கு பாகா கலிபோர்னியாவின் ஐலா சாண்டா கேடலினா பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரையில் இருந்து, சுமார் 40 கிலோ மீட்டர் பரப்பளவில் மட்டுமே இந்த வகை உயிரினம் காணப்படுகிறது.

மேலும், இந்த சுண்டெலி மான், அந்த தீவின் பூர்விக பாலூட்டிகளாகவும் உள்ளன. இதற்கு சுலெவின் சுண்டெலி என கலிபோர்னியாவின் அறிவியல் குழுமத்தினைச் சேர்ந்த அருங்காட்சியகக் காப்பாளர் ஜோசப் சுலெவின் பெயரிட்டுள்ளார்.

இந்த சுண்டெலி மானின் மொத்த நீளம் சுமார் 21 சென்டி மீட்டர் ஆகும் அதில் 10 சென்டி மீட்டர்கள் வாலின் நீளமாகும்.

மிகவும் அரியவகையை சேர்ந்த இந்த சுண்டெலி மான் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்லா மற்றும் பாலாகாட் ஆகிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் ஏற்கனவே காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அரியவகை சுண்டெலி மான் ஒன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அளக்கரை எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிந்துள்ளது.

இதை பார்த்த எஸ்டேட் ஊழியர்கள் ஏதோ புதிய வகை உயிரினமாக உள்ளது என ஆச்சரியத்தில் ஆழ்ந்து வியப்புடன் பார்த்துள்ளனர்.

தொடர்ந்து சிலர் அந்த சுண்டெலி மானை செல்ஃபோனில் வீடியோவும் எடுத்துள்ளனர். சற்று நேரம் அங்கு உலா வந்த அந்த சுண்டெலி மான், தொடர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.

உலக அளவில் அரியவகை உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சுண்டெலி மான் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், அந்த உயிரினத்தை முழுமையாக பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.