சென்னையில் விதிகளை மீறி செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது அதிரடி நடவடிக்கை ..

சென்னையில் விதிகளை மீறி சீருடை அணியாமலும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மீது அதிரடி நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.இது பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விதிமுறைகள் மீறி இயங்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில், பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடை அணிவது இல்லை. அவர்களில் பலர் பயணியரிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர் சிலர் குடிபோதையில் ஆட்டோக்களை இயக்குகின்றனர் என போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி, ஒழுங்கீனமாக செயல்படும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.அதன்படி, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் தலைமையிலான போலீசார் சென்னை முழுதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டிய, 570 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, ஓட்டுனர் இருக்கையில் இரு நபர் பயணம் செய்தது தொடர்பாக, 189 பேர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், அதிக நபர்களை ஏற்றிச் சென்ற 148 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தவிர அதிக கட்டணம் வசூலித்த 42 பேர் பயணத்திற்கு வர மறுத்து அடாவடி செய்த ஒன்பது பேர் குடிபோதையில் ஆட்டோ ஓட்டியவர் ஒருவர் என, மொத்தம், 959 ஆட்டோ ஓட்டுனர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சென்னையில் விதிகளை மீறி, சட்டவிரோதமாக இயக்கப்படும் ‘ஷேர் ஆட்டோ’க்கள் மீதும் அதிரடி நடவடிக்கை துவங்கியுள்ளது. விதிகளை மீறி, வழித்தட பெயர்ப்பலகையுடன் இயக்கப்பட்ட 60 வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், 2 லட்சத்து, 40 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல், தகுதிச் சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 14 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் கண்காணிக்க படவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

images 81 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories