உலகப்புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா மே10 இல்-கட்டுப்பாடுகள் நீக்கம்..

கேரளாவில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான உலகப்புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் மே 10இல் நடைபெறும் என்று கேரளா தேவசம் போர்டு அமைச்சர் கே .ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் திருச்சூர் வடக்கு நாதன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் சித்திரை மாதம் பூரம் நாளில் நடைபெறும் திருச்சூர் பூரம் திருவிழாவில் உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

விழாவின் போது நடைபெறும் யானைகள் அணிவகுப்பு குடை மாற்றம் மற்றும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளை காணவும் பலர் கோவிலுக்கு வருவார்கள்.

கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக திருச்சூர் பூரம் விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் பக்தர்கள் பங்கேற்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

இந்த ஆண்டுக்கான திருச்சூர் பூரம் விழா மே மாதம் 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கேரள தேவஸ்தான மந்திரி ராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றுநோய் காரணமாக சம்பிரதாய நிகழ்வாக கொண்டாடப்பட்டது மற்ற விவாதிக்கப்பட்டது.

images 96 - 2026
images 93 - 2026
images 92 - 2026
images 94 1 - 2026

திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களான அமைச்சர்கள் கே.ராஜன் மற்றும் ஆர்.பிந்து ஆகியோர் கலந்துகொண்ட தேவஸ்வம் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பூரம் திருவிழா முழுவதையும் அதன் ஆடம்பரத்துடன் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
தேவஸ்தான பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கோவிட் கட்டுப்பாடுகள் இருக்காது, ஆனால் சுய கட்டுப்பாடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும் அவர் கூறியபோது பூரம் பார்க்க வருபவர்கள் முககவசம் மற்றும் சானிடைசர்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

கொரோனாவில் இருந்து மீண்ட சிலருக்கு இன்னும் லேசான அசௌகரியங்கள் உள்ளதால் அவர்கள் கூட்டத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மே 10ம் தேதி பூரம் விழா கொண்டாடப்படுவதையொட்டி மே 4ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது.பூரத்தின் முக்கிய அம்சமான முக்கிய வாணவேடிக்கை மே 11ம் தேதி நடக்கிறது.இது தொடர்பான மாதிரி வாண வேடிக்கையை மே 8-ந் தேதி நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு, முக்கிய சடங்குகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்கேற்புடன் மட்டுமே பூரம் நடைபெற்றது என்றார்.
இதையடுத்து கோவிலில் பூரம் விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories