தாலி கட்டும் முன் மாப்பிள்ளையின் விக் விழுந்ததால், ஏமாற்றமடைந்த மணப்பெண் நின்றுபோன திருமணம்..

உத்திரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளையின் விக் திடீரென்று கழன்று விழுந்ததால், ஏமாற்றமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், மாவட்டத்தில் திருமணத்துக்கு முந்தையநாள் மாலை அனைத்து சடங்குகளும் மணமகன் மணமகள் வீட்டார் சார்பில் முடிந்துள்ளன.

அடுத்த நாள் காலை திருமண நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இந்நிலையில், மணமகன் மண்டபத்திற்குள் நுழையும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது, எதிர்பாராவிதமாக அவரது தலையில் இருந்த ‘விக்’கும் கழன்று விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார். மணமகளை அவருடைய குடும்பத்தினர் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் மணமகள் ஒத்துக்கொள்ளவே இல்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, இது குறித்து மணமகள் வீட்டார் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். இந்த திருமணத்திற்காக ரூ. 5.66 லட்சம் செலவு செய்திருப்பதாகவும், அதனை மணமகன் வீட்டார் திருப்பித் தர வேண்டும் என்றும் மணமகளின் வீட்டார் கூறியிருக்கின்றனர். அதற்கு மணமகன் வீட்டாரும் ஒத்துக்கொண்டதை அடுத்து இந்தப் பிரச்சினை முடித்துவைக்கப்பட்டது.

இதுகுறித்து மணமகளின் மாமா கூறுகையில், மணமகனின் வழுக்கை குறித்து அவர்கள் முன்பே கூறியிருந்தால் மனதளவில் எங்களுடைய பெண்ணை தயார் செய்திருப்போம். ஆனால், அவர்கள் அதை மறைத்தது அவர்கள் மீதான நம்பிக்கையை இழக்க வைத்துவிட்டது என்று கூறினார்.

2019ஆம் ஆண்டு ஆயுஷ் குர்ரானா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ’பாலா’. இளம்வயதில் வழுக்கை விழுந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்காக வழுக்கையை எப்படி மறைக்கிறார் என்பதை கருவாகக் கொண்டது இத்திரைப்படம். அதேபோன்ற சம்பவம் போன்றே உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் நடந்துள்ளது. ஆனால் இந்த ரியல் ஸ்டோரியில் துரதிர்ஷ்டவசமாக கிளைமாக்ஸில் மணமகன் தோல்வியை தழுவிவிட்டதாக மணமக்கள் வீட்டார் விமர்சனம் செய்தனர்.

154462 - 2026
704748 maarage33 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories