அடுத்த சரவெடி…! நாளை இபிஎஸ் தரப்பினர் உண்ணாவிரதம்..

Published:

926898 edappadi 1 - 2026

எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அறிவிக்கப்படாததை எதிர்த்து நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டதில் பங்கேற்கவில்லை. ஆனால், ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.

சட்டசபையின் முதல் நாள் நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு மணி துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். 2 வது நாளாக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடிய்து இன்று சபை கூடியதும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற உத்தரவை சபாநாயகர் பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அறிவிக்கப்படாததை எதிர்த்து நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை உண்ணாவிரதத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி அனுமதி கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க மனு அளித்துள்ளது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img