திருமலையில் ரூ.1600 கோடி ரூபாய் உண்டியல் வருவாய் கிடைக்குமாம்: தேவஸ்தான அதிகாரிகள் கணிப்பு..

1719060 tirupatitemple - 2026

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் வருவாய்  புதிய சாதனைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  இந்த நிதி ஆண்டில் உண்டியல் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.1000 கோடி இருக்கும் தேவஸ்தான அதிகாரிகள் மதிப்பிடு செய்துள்ளனர்.

ஆனால் வெறும் 8 மாதங்களில்  உண்டியல் வருவாய் ரூ.1161.74 கோடி கிடைத்துள்ளது. ஏழுமலையான் கோயில் உண்டியிலில்  8 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கு மேல் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 9வது மாதமாக உண்டியல்  வருவாய் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. நவம்பர் மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.127.30 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதன் மூலம், இந்த நிதி ஆண்டில் உண்டியல் வருவாய் ரூ.1600 கோடியைத் தாண்டும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். கடந்த 9 மாதங்களில், அதிக பட்சமாக ஜூலை மாதத்தில் மட்டும்  ரூ.139.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  

தினமும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவதாலும், தினமும் நான்கு கோடி ரூபாய் உண்டி வருமானம் கிடைப்பதாலும் இந்த அளவில் உண்டி வருவாய் கிடைக்கின்றதும் இதுவரை 2019-20 நிதி ஆண்டுக்கான அதிகபட்ச உண்டியல் வருவாய் ரூ.1,313 கோடியாகும். இந்நிலையில் இந்த நிதி ஆண்டில் ரூ.1600 கோடி உண்டியல் வருவாய் கிடைக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு 1000 கோடி கிடைப்பதால்  தேவஸ்தானத்தின் நிலையான வைப்புத்தொகை (ஃபிக்சட் டெபாசிட்)  ரூ.15,938 கோடிகளையும், மற்றும் தங்கம் கையிருப்பு 10,258 கிலோவைத் தாண்டியுள்ளது. 1950-ம் ஆண்டு வரை ஏழுமலையானுக்கு கிடைத்த உண்டி வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாகவே இருந்தது, ஆனால் 1958-ல் முதன்முறையாக ஒரு லட்சத்தை தாண்டியது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

1990 ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உண்டியல் வருவாய்  வரத் தொடங்கியது.  அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2010 ஆண்டு அக்டோபர் 23 தேதி ஒரே நாளில் ரூ.3.6 கோடியாகவும், 2011 ஆண்டு நவம்பர் 1 தேதி ரூ.3.8 கோடியாகவும், 2012 ஜனவரி 1-ஆம் தேதி ரூ.4.23 கோடியாகவும் இருந்தது. 2012 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று அதிகபட்சமாக ரூ.5.73 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி ரூ.6 கோடியைத் தாண்டியது.  

2015-16-ம் உண்டியல் ஆண்டு வருவாய் ரூ..1,000 கோடியைத் தாண்டியது. 2019-20- நிதி ஆண்டில் ரூ.1,313 கோடியை எட்டியது.  கொரோனா பாதிப்பால் சுவாமியின் உண்டி வருமானம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்துள்ளது. 2020-21ல் நிதி ஆண்டில் ரூ.731 கோடியும், 2021-22ல் ரூ.933 கோடியும்.  

நடப்பு நிதியாண்டில், தொடர்ந்து 9வது மாதமாக சுவாமியின் உண்டியல் வருவாய் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு திருமலையில் தங்கும் வசதி, அன்னதானம் போன்ற வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் வைகுண்ட ஏகாதசி வருவதால், உண்டி வருவாய்  மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories