கடன் பிரச்சினை தன்னை போல உள்ள பெண்ணை கொலை செய்து நாடகமாடிய இளம் பெண்..

Published:

1016146 bayal - 2026

உ.பி.யில் கடன் பிரச்சினையால் தன்னை போல உள்ள பெண்ணை கொலை செய்து விட்டு தான் மாரணம் அடைந்து விட்டதாக நாடகமாடிய இளம் பெண் காதலனுடன் கை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டா உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டார் நொய்டாவில் வசித்து வருபவர் பயல் பாஹ்தி (22). பயலின் பெற்றோர் கடந்த மே மாதம் தற்கொலை செய்து கொண்டனர். தனது உறவினராக சுனில் என்பவரிடம் இருந்து பயலின் பெற்றோர் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தனர். கடனை திருப்பி தரும்படி பயலின் பெற்றோரிடமும் சுனில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதேபோன்று, பயலின் அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரும் பயலின் பெற்றோரிடம் பணத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்துள்ளனர்.

கடன் தொல்லை காரணமாக பயலின் பெற்றோர் மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்கள், சுனில், அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரை பழிவாங்க வேண்டும், கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டும் என இதனால் பயல் வீட்டில் அமைதியற்ற சூழ்நிலையே நிலவி வந்தது. கடன் தொல்லை காரணமாக பயலின் பெற்றோர் மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்கள், சுனில், அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேரை பழிவாங்க வேண்டும் பணத்தை திருப்பி தராமல் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவும், கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கவும் பயல் திட்டமிட்டுள்ளார் திட்டமிட்டுள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இதற்காக தனது காதலனான அஜய் தாக்கூரை கூட்டு சேர்த்து உள்ளார். பயல் பாஹ்தி தனது காதலன் அஜய் தாகூருடன் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மாலுக்கு சென்றுள்ளனர். அங்கு தன்னை போன்ற உடல் அமைப்பு கொண்டு வணிக வளாகத்தில் வேலை செய்து பெண் ஹேமா சவுதிரியை (28) பார்த்துள்ளார். ஹேமாவை கொன்று தான் உயிரிழந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைக்க பயல் திட்டமிட்டு உள்ளார்.

காதலன் அஜய் தாக்கூரை மாலில் வேலை செய்யும் ஹேமாவிடம் பழகுமாறு கூறி உள்ளார். இதை கேட்டு அஜய் தாக்கூரும் அவருடன் நட்பாக பழகினார். நவம்பர் 12-ஆம் தேதி ஹேமாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு அஜய் தனது காதலி பயலின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு வீட்டில் இருந்த பயல் மற்றும் அவரது காதலன் அஜய், ஹேமாவை கழுத்தறுத்து கொலை செய்து உள்ளனர். பின்னர் ஹேமாவின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றனர். பின்பு, உயிரிழந்த ஹேமாவின் உடலில் பயல் உடையை அணிவித்து உள்ளனர். கொதிக்கும் எண்ணெய் முகத்தில் பட்டதால், தனது அழகு போய்விட்டதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாக பயல் தன் கைப்பட கடிதம் எழுதி ஹேமா அருகே போட்டு விட்டு காதலனுடன் தலைமறைவானார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

ஆனால் ஹேமாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கடைசியாக அஜய் தக்கூருடன் அவர் பைக்கில் சென்னறது தெரியவந்தது. இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில் பயல் மற்றும் காதலன் அஜய் ஹேமாவை கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img