இந்தியா முழுவதும் 259 ரெயில்கள் இன்று ரத்து..

1012308 chennai 16 1 - 2026

இந்தியா முழுவதும் 259 ரெயில்கள் இன்று ரத்து; ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பராமரிப்பு பணி, தெளிவற்ற வானிலை உள்ளிட்ட காரணங்களுக்காக 259 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

வடஇந்தியாவில் அடர்பனியால் வாகனங்கள், ரெயில், விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லி விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இன்று 20 விமானங்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. இதேபோன்று ரெயில் போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது. இந்த நிலையில், ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் 259 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன என அறிவித்து உள்ளது.

ரெயில்வே தண்டவாளங்களில் பராமரிப்பு மற்றும் இயக்க பணிகளுக்காக இந்த ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, வடக்கு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தெளிவற்ற வானிலை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 42 ரெயில்கள் சென்று சேரும் இடங்கள் மாற்றப்பட்டு உள்ளன. 42 ரெயில்களின் பயண தொலைவு குறைக்கப்பட்டு உள்ளது.

34 ரெயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. 20 ரெயில்களின் போக்குவரத்து திசைமாற்றி விடப்பட்டு உள்ளது என்றும் அறிவிப்பு வெளிவந்து உள்ளது. இதனால், கோரக்பூர், லக்னோ, கோட்டயம், கொல்கத்தா, சூரத், உதய்ப்பூர், ஷாலிமர், அமராவதி, பதன்கோட், பல்வால் உள்ளிட்ட பல நகரங்கள் பாதிக்கப்பட கூடும். ரெயில் பயணிகளும் இந்திய ரெயில்வேக்கான என்.டி.இ.எஸ். எனப்படும் வலைதளத்தில் சென்று ரெயில்களின் நிலை பற்றி அறிந்து கொள்ள ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனால், பயணிகளின் முன்பதிவு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, பயனாளர்களின் கணக்குகளுக்கு பணம் விரைவில் திருப்பி செலுத்தப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories