எருது விடும் விழாக்களுக்கு அனுமதி பெற மக்களுக்கு எளிமையான வழிமுறைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் … என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் சி சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார் அவர் வெளியிட்ட அறிக்கை…
நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகில் கோபசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழா நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர் இதற்கான அனுமதி நேற்று முன்தினம் அரசு அனுமதி கிடைத்து விட்டது என அதிகாரிகள் விழாக் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா தலைமையில் கால்நடை பராமரித்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை, மின்சாரத்துறை, தீயணைப்பு துறை, கூட்டுக்குழு தணிக்கை செய்து அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் ஆனைக்கல், அத்திப்பள்ளி, கோலார், மாலூர், குப்பம் போன்ற வேறு மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் 300க்கும் மேற்பட்ட காளைகளுடன் 5000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு கூடி இருந்தனர், ஆனால் அதிகாரிகள் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை .விழா நடத்தக்கூடாது என்று தடுத்ததை அடுத்து, ஏற்கனவே இரண்டு முறை இதே போல் மக்களை அலைக்கழித்து பின்பு அனுமதி மறுத்த அரசு நிர்வாகத்தின் மீது கோபம் கொண்ட இளைஞர்கள் மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து வந்த ஊர் மக்கள் நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தும் கற்களை வீசியும் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து சாலையில் நின்ற அரசு தனியார் பஸ்கள் லாரிகள் ,கார் ,ஜிப், என 30ற்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது
பொதுமக்கள், மாணவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் பெரிதும் அவதிக்குள்ளாயினர், ஏற்கனவே ஏராளமாக குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்ணீர் புகை மூலமாகவும், தடியடி நடத்தியும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். என்று பத்திரிகைச் செய்திகள் வாயிலாக தெரிந்தது.
இதுபோல் பின்வரும் காலங்களில் எந்த விதமான சட்டம் ஒழுங்கு மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தமிழர்களின் பாரம்பரியமான எருது விடும் விழாக்களுக்கு அனுமதி பெற மக்களுக்கு எளிமையான வழிமுறைகளை சிங்கிள் விண்டோ சிஸ்டம் முறையில் தமிழக அரசு உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகின்றது.