:
பட்டியல் இனத்தவர் என்று பொய் சான்றிதழ் கொடுத்து இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.பி.எம். சட்டமன்ற வேட்பாளர் அ.ராஜாவை தகுதி இழப்பு செய்தது கேரள உயர் நீதிமன்றம்.
காங்கிரஸ் வேட்பாளர் டி.குமாரை 7,847 அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பா ளர் டி குமார் இவரது வெற்றியை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து குற்றச்சாட்டை தக்க ஆதாரங்களைக் கொண்டு நிரூபித்துள்ளார்.
ஏ ராஜா ஒரு பிறவி கிறிஸ்துவர். அந்தோனி – எஸ்தர் தம்பதிக்குப் பிறந்தவர். மனைவி ஷினிப்ரியா. சர்ச்சில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது அணிவித்த நெக்லெஸ்ஸில் சிலுவைக் குறி இருந்துள்ளதையும் நீதி மன்றத்தில் டி.குமார் ஆதாரமாக தாக்கல் செய்துள்ளார்.
தேவிகுளம் தொகுதியில் 62% வாக்கா ளர்கள் தமிழர்கள். பட்டியல் இனத்த வர்களான பள்ளர்கள் & பறையர்கள் அதிகமாக உள்ளனர். நாடெங்கிலும் மதம் மாறிய பலர் போலி சான்றிதழ் கொடுத்து ஹிந்து பட்டியல் இனத்தவர்களுக்கு உரிய உரிமையைப் பறித்து வருகின்றனர்.