புது தில்லி: இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவிட்டர் பதிவிட்டிருக்கிறார்.
இந்திய குடியரசுத் தலைவரின் டிவிட்டர் பக்க பதிவுகள் எல்லாம் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே இருந்துள்ளன. தற்போது முதல் முறையாக குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தமிழில் தகவல் பதிவிடப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மடகாஸ்கரில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது.
அந்த டிவிட்டர் பதிவு..
ஜனாதிபதி கோவிந்த் மடகாஸ்கரில் இந்திய சமூகத்திடம் உரையாற்றினார்; இந்தியா தனது புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறது. அவர்கள் இந்தியாவின் உண்மையான தூதர்களாகவும், நமது பெரிய நாட்டின் நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளனர்
ஜனாதிபதி கோவிந்த் மடகாஸ்கரில் இந்திய சமூகத்திடம் உரையாற்றினார்; இந்தியா தனது புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறது. அவர்கள் இந்தியாவின் உண்மையான தூதர்களாகவும், நமது பெரிய நாட்டின் நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளனர் pic.twitter.com/DYbrtc4iL4
— President of India (@rashtrapatibhvn) March 14, 2018