
திரு.தனியரசு அவர்களுக்கு வணக்கம்…
கொங்கு சமுதாயத்தின் வளர்ச்சிக்காக என்று அரசியல் இயக்கமாக அடியெடுத்து வைத்த நீங்கள் பல அதிரடிகளில் ஈடுபட்டீர்கள்…
உங்களை மாவீரர் என்று பல நூறு இளைஞர்கள் கொண்டாடி உங்கள் பின் திரண்டனர். காவல்துறையின் தடிகள் கூட உங்களை மாற்றிவிட முடியவில்லை.
ஈஸ்வரன் வகையறாக்கள், கட்சி ஆரம்பித்து தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தனர். நீங்கள் சமயோசிதமாக ஜெயலலிதாவுடன் இணைந்து எம்.எல்.ஏ ஆனீர்கள்…
அந்தம்மா இருக்கும் வரை நன்றாகத் தான் இருந்தீர்கள். ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் உங்கள் தனித்துவம் எங்கு போனதென்று தெரியவில்லை.
தமீமுன் அன்சாரியின் தலையாட்டி பொம்மையாக மாறிப் போனதேன்?
தினகரன் அணியினர் பணம் கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்த போது தான் பணம் வாங்க வில்லை என்று அவரது கடவுள் மீது தமீமுன் அன்சாரி சத்தியம் செய்தார்!
ஆனால் நீங்கள் அமைதியாக இருந்தீர்கள்… அன்றிலிருந்து தமீமுன் அன்சாரியே உங்களுக்கு தலைவராக மாறிப் போனார். பின்னணியில் நடந்தது என்ன?
சோமனூர் பஸ் ஸ்டேண்ட் இடிந்து விழுந்து கொங்கு இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலியான போதும், படுகாயமடைந்த போதும் உங்களால் சிறு துரும்பைக் கூட அசைத்து போட முடியவில்லை. ஆனால், ரோகிங்யா முஸ்லீம்கள் மீது பர்மாவில் நடக்கும் தாக்குதலுக்கு இங்கு ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்…
நமது இனத்திற்கு எதிராக, நமது கடவுள்களுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் வெட்கமில்லாமல் கலந்து கொண்டீர்கள்…
உச்ச கட்டமாக, நம் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற அப்பாவி ஆசிரியரை காரணமேயின்றி மதவெறியால் கொலை செய்த கொலைகாரனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஏரோப்ளேன் ஏறி கோவைக்கு வந்து சென்றீர்கள்…
நீங்கள் யார் என்று மறந்து போனீர்களா. கொங்கு இனத்தில் ராமசாமி என்ற பெயர் இல்லாத பரம்பரை இருக்காது. ஆனால் நீங்களோ ராமர் ரத யாத்திரைக்கு எதிராக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறீர்கள்.
நீங்கள் இரட்டை இலையில் போட்டியிட்ட போது, உங்கள் தொகுதியில் உள்ள நீங்கள் இன்று யாரை பின்தொடர்கிறீர்களோ அவர்கள் உதயசூரியனுக்கு தான் வாக்களித்தனர்.
இனிமேல் போட்டியிட்டாலும் அவர்களில் ஒருவர் கூட உங்களுக்கு ஓட்டுப் போடப் போவதில்லை.
உங்கள் இனத்தைப்பற்றியோ, மதத்தைப்பற்றியோ உங்களுக்கு சிறிது கூட தெளிவில்லை என்பதால் தான் தமீமுன் அன்சாரியின் விரலசைப்பிற்கு ஏற்ப நடனமாடுகிறீர்கள்…
மீண்டு வாருங்கள்…. நீங்கள் தலைவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருங்கள்… உங்களைப் பற்றியும், உங்கள் பாரம்பரியத்தின் பெருமை பற்றியும் அறிந்து கொள்ள கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை படியுங்கள்.
இப்படிக்கு,
உங்களுக்கு வாக்களித்த அப்பாவி இந்துக்களில் ஒருவன்.
* திருந்தாவிடில் திருத்தப்படுவீர் தனியரசு என்ற தலைப்பிட்டு சமூக வலைதளத்தில் உலாவரும் கடிதம்.



