ஜெர்மன் தொழில்நுட்ப டாக்டர்

ஜெர்மன் தொழில்நுட்பம் இங்கே கையாளப்படுகிறது. நோயாளிகள் (ஷூக்கள்) பொறுமை காக்கவும்'' என்று அச்சிடப்பட்டுள்ளது

மகிந்த்ரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா ஒரு புதுமை விரும்பி ,யாரேனும் புதிய முயற்சி செய்திருந்து அது தனது பார்வைக்கு பட்டு விட்டால் அவரை கொண்டாடும் குணம் கொண்டவர் ,அண்மையில் கேரளாவில் ஆட்டோ ஒன்று மகிந்த்ரா நிறுவனத்தின் ‘ஸ்கார்பியோ’ கார்போல போல சில மாற்றங்கள் செய்த ஆட்டோ சென்று கொண்டிருந்திருக்கிறது . அந்த ஆட்டோவை படம்பிடித்த மகிந்திரா நிறுவனத்தை சேர்ந்தவர் ஆனந்த் மகிந்த்ரா க்கு ட்வீட் போட்டு சொல்ல ஆட்டோவுக்குச் சொந்தமானவரைக் கண்டுபிடித்து புத்தம் புது ஸ்கார்பியோ பரிசளித்தார் ஆனந்த் மகிந்த்ரா தனக்கு வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படம் ஒன்றை ட்வீட் செய்திருந்தார். புகைப்படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி . அவருக்குப் பின்னால் ஒரு பேனர் வைத்திருக்கிறார் , இங்கே காயமடைந்த ஷூக்கள் குணப்படுத்தி தரப்படும். பார்வை நேரம் காலை 9 மணி முதல் 1 மணி வரை. லஞ்ச் டைம் 1 முதல் 2 மணி வரை. மீண்டும் 2 முதல் மாலை 6 மணி வரை ஷூக்கள் குணப்படுத்தி தரப்படும். டாக்டர்.நரசிம்மன். ஜெர்மன் தொழில்நுட்பம் இங்கே கையாளப்படுகிறது. நோயாளிகள் (ஷூக்கள்) பொறுமை காக்கவும்” என்று அச்சிடப்பட்டுள்ளது
செருப்பு தைக்கும் அவருடைய வித்தியாசமான மார்க்கெட்டிங் உத்தி ஆனந்த் மகிந்த்ராவுக்கு பிடித்துபோக , ‘இந்த மனிதர் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் இருக்க வேண்டியவர்’ என்று ஆனந்த் மகிந்த்ரா ட்வீட் செய்திருந்தார். இவருக்காகவே சிறிய முதலீடு அளிக்க விரும்புகிறேன். இந்த புகைப்படம் யார் எடுத்ததோ எங்கு எடுக்கப்பட்டதோ தெரியவில்லை. இவரைப் பற்றி யாராவது அறிந்திருந்தால் எனக்குத் தகவல் கொடுங்கள்’ என தன் ட்வீட்டில் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.