கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி போன்றவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கைக்குப்பிறகு கள்ள நோட்டு புழக்கமும், சந்தேக பணப்பரிமாற்றமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
அண்மையில் எப்.ஐ.யு. தற்போது அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையின்படி கள்ளநோட்டு பரிமாற்றங்கள் கடந்த 2016-17-ம் ஆண்டில் 7.33 லட்சம் முறை நிகழ்ந்துள்ளது. இது 2015-16-ம் ஆண்டில் 3.22 லட்சமாக இருந்து இருக்கிறது.
இது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமா உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது ,கண்டுபிடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு எவ்வளவு? என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை
இதைப்போல சந்தேக பணப்பரிமாற்ற சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் எப்.ஐ.யு. அறிக்கை கூறுகிறது அதன்படி 2016-17-ம் ஆண்டில் 4,73,006 முறை இத்தகைய பரிமாற்றம் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 4 மடங்குக்கும் அதிகம் என தெரிய வந்துள்ளது.
இத்தகைய சந்தேக பரிமாற்றங்கள் பெரும்பாலும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ளப்பட்டதாக இருக்கலாம் எனவும் எப்.ஐ.யு.வின் அறிக்கை தெரிவிக்கிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை கள்ள நோட்டு புழக்கம் அதிகரிதுள்ளதா ?
Popular Categories



