January 20, 2025, 6:39 PM
26.2 C
Chennai

காங்கிரஸ் வெற்றிபெற கேம்பிரிட்ஸ் அனலிடிகா கொடுத்த பகீர் திட்டங்கள்! வெளிநாட்டு சதியை இந்திய சமூகம் முறியடிக்குமா?

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற சதிகாரத் திட்டமிடல் நிறுவனம் குறித்த விழிப்புணர்வு இப்போது பரவலாகியிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்காக என்ன திட்டங்களை தீட்டிக் கொடுத்தது, இனி இந்த நடைமுறையை மற்ற நாடுகளில் எப்படி தாங்கள் மேற்கொள்ளப் போகிறோம் என்பது குறித்தெல்லாம் அதன் திட்ட அறிக்கைகள் இப்போது ஒவ்வொன்றாக வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா குறித்த செய்திகள் வெளியான போது, உலகமே கொதித்தது. அதன் கூட்டுச் சதியாளராக பேஸ்புக் நிறுவனம் இருந்தது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களது ரகசிய தகவல்களை பேஸ்புக்கில் இருந்து திருடி, அதை தேர்தல் பிரசாரத்துக்கு கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா பயன்படுத்துவது குறித்து அறிந்த போது, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் கொதித்த அளவுக்கு இந்தியர்கள் பெரிதாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், ஆதார் குறித்த அரசின் தகவல்கள் கசியும் என்று கூறப்படும் செய்தியை அத்தனை பேரும் நம்பினார்கள். அதற்காக ஒரு பிரசாரமும் செய்யப் பட்டது.

ஆனால் இத்தகைய பிரசாரங்களுக்கு பின்னே ஒரு வெளிநாட்டு நிறுவனம் இருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா? ஆனால் அதை உண்மையாக்கி இருக்கிறது காங்கிரசுக்காக கேம்பிரிட்ஜ் அனலிடிகா பார்த்துக் கொடுத்த திட்ட அறிக்கை வேலை.

கர்நாடகத்தில் காங்கிரஸுக்காக களமிறங்கிய கேம்பிரிட்ஜ் அனலிடிகா: என்ன செய்யப் போகிறது பேஸ்புக்?

காங்கிரஸ் என்றாலே பொய் மூட்டைகள்தான் என்றாகிவிட்ட நிலையில், மேலும் பொய்களை எப்படி அவிழ்த்து விடுவது என்பது குறித்து ஒரு நிறுவனம் திட்டம் தீட்டித் தருகிறது என்றால்…! அது நம் நாட்டுக்கு எவ்வளவு பெரிய அபாயம்!

போலி பேஸ்புக் பதிவுகள், போலியான பிரசாரம், போலியான செய்திகள், பதட்டமூட்டும் பிரிவினைவாத செய்திகள், போராட்டங்கள், மீம்ஸ்கள், பார்த்தவுடனே பதைபதைக்க வைக்கும் படங்கள் இன்னும் எத்தனை எத்தனை பொய் மூட்டைகள்…? இன்றைய சமூக இணைய உலகம் இத்தகைய குப்பைகளால் நிரம்பியுள்ளது என்பதை நாம் இதன் பின்னணியில் உள்ள சதியின் மூலம் நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸை தயார் செய்து, அதை வெற்றி பெறச் செய்வதற்கு கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா கொடுத்த திட்டங்களைப் பார்க்கும் போது, சமூக ஊடகங்களிலேயே காலத்தைப் போக்கும் பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது!

அதுமட்டுமல்ல, தற்போது கர்நாடக தேர்தலுக்காக கேம்பிரிட்ஜ் அனலிடிகா களமிறங்கிய நிலையில், அதற்கு உடந்தையாக இருந்த பேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதனால், இப்போது பேஸ்புக் நிறுவனம், கர்நாடக தேர்தல் களத்தில் எச்சரிக்கையாக இருக்கப் போவதாகக் கூறியுள்ளது.

ALSO READ:  கொல்லம் -செகந்திராபாத் சிறப்பு ரயில் (07176) நேரம், வழித்தடம் மாற்றம்!

கர்நாடக தேர்தலில் இணையவழி முறைகேடுகளைத் தடுக்க பேஸ்புக் புதிய வழிமுறையை கையாளப் போகிறதாம். பொய்யான தகவல் பரப்பும் கட்டுரைகள், போஸ்ட்களை முடக்க பேஸ்புக் முடிவெடுத்துள்ளதாம். மத்திய அரசின் கண்டிப்பான அணுகுமுறையால், இந்தியாவில் நடக்க இருக்கும் தேர்தலில் எந்த விதமான முறைகேடும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து தகவல்களைத் திருடிப் பயன்படுத்திய பிரச்னை எழுந்ததும் மார்க் இப்படிப் பேசினார். இந்த திருட்டு மூலம் உலகம் முழுக்க நடந்த பல தேர்தல்களில் பேஸ்புக் முறைகேடு செய்ததாகக் கூறப்பட்டது. அமெரிக்க தேர்தல், இந்திய நாடாளுமன்ற தேர்தல், பிரிக்சிட் ஆகிய தேர்தல்களில் பேஸ்புக் நிறுவனத்தின் கூட்டு சதி குறித்து வெளிப்படையாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது கர்நாடக தேர்தலுக்காக ‘பூம்’ என்ற சர்வதேச நிறுவனத்துடன் கைகோக்க பேஸ்புக் முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் கர்நாடக தேர்தல் முடியும் வரை பேஸ்புக்கில் உலவும் பொய்யான போஸ்டுகளை கட்டுப்படுத்தும் என்று கூறப் படுகிறது. இந்நிறுவனத்தில் இதற்காக தனி குழு உருவாக்கப் பட்டுள்ளது. இக்குழு பேஸ்புக்கில் கர்நாடக தேர்தல் குறித்து எழுதப்படும் அனைத்து போஸ்டுகளையும் ‘ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்’ நுட்பம் மூலம் ஆய்வு செய்யும். அவற்றில் பொய்யாக இருக்கும் போஸ்டுகளை முடக்கும்.

பயனர்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பேஸ்புக் மீது மீண்டும் மக்களுக்கு மதிப்பு வர வேண்டும் என்று இப்படி செய்யவுள்ளது. இப்படி பொய்யான போஸ்டுகளை 80 சதவிகித மக்களுக்கு பேஸ்புக் காட்டாமல் தடுக்கும். மேலும், செய்தி இணையதளங்கள் பொய்யான தகவலை பேஸ்புக் மூலம் பரப்பினால், அதுகுறித்து அந்தத் தளங்களுக்கு பேஸ்புக் தகவல் தெரிவிக்கும். பின்னர் ஒட்டுமொத்தமாக அந்தச் செய்திகளை முடக்குமாம். தொடர்ந்து பொய்த் தகவல் பரப்பினால் தேர்தல் முடியும் வரை அவர்களது போஸ்டுகள் யாருக்கும் தெரியாத வகையில் பேஸ்புக் பார்த்துக் கொள்ளும் என்று உறுதி அளிக்கப் பட்டுள்ளது.

* கேம்பிரிட்ஜ் அனலிடிகா காங்கிரஸுக்கு கொடுத்த திட்ட அறிக்கை!

* காங்கிரஸுக்காக கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் சிஏ பொலிடிகல் எனும் இதன் துணை அமைப்பின் சார்பில் காங்கிரஸுக்கு திட்டம் வகுத்துக் கொடுக்கப் பட்டது.

* லண்டனில் இருக்கும் சிஏ., பொலிடிகல், அரசியல் சார்பில் தரவுகளக் கொடுக்கும்.

* ஐந்து நாடுகளில் 100 பிரசாரத் திட்டங்களை அது செயல்படுத்தியுள்ளது. .

* ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இப்போது 2013ல் அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்துள்ளது இந்நிறுவனம். லண்டன், வாஷிங்கடன் டிசி, நியூ யார்க், இந்தியா, பிரேசில், மெக்சிகோ, உள்ளிட்ட நாடுகளில் இந்நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் உள்ளன. அமெரிக்க அதிபர், செனேட், காங்கிரசுக்கான தேர்தல்களின் இது வேலை செய்து கொடுத்துள்ளது.

ALSO READ:  தினகரன், சசிகலா, ஓபிஎஸ்., இணைந்தால் மீண்டும் குழப்பமே வரும்: ராஜன் செல்லப்பா!

* காங்கிரஸுக்கு இந்நிறுவனம் தயார் செய்து கொடுத்த திட்டத்தின் உள்ளடக்கம்..

* கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 545க்கு 44 இடங்களே வென்ற காங்கிரஸ், அடுத்து எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற திட்டங்களை இது வகுத்துத் தருகிறது. பாஜக., பெற்ற வெற்றி குறித்துக் கூறும் அதே நேரம், அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற பாஜக., முழு மூச்சில் உள்ளது என்றும், அதை எப்படி உடைப்பது என்றும் யோசனைகளைத் தெரிவிக்கிறது.

* 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கும், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் தேர்தலுக்கும் வெற்றிக்கான வழிகளை காங்கிரஸுக்குத் தருகிறது.. அதற்கு என்ன தேவை என்று சொல்கிறது..

* இந்த வெற்றியைப் பெற தரவுகளை எப்படி தயார் செய்வது, கையாள்வது என்பது குறித்து விரிவாகக் கூறுகிறது இந்த அறிக்கையில்.

* நடப்பு நிலை குறித்த ஆய்வு, தேசிய கர்நாடக, ம.பி., சட்டீஸ்கர் ஆய்வுகள் பின் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆய்வு என செல்கிறது இதன் யோசனை.

* ஊடகங்கள், சமூக ஊடகங்களைக் கையாள்வது குறித்த வழிகாட்டல்..

* இதை சாதிக்க, அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, திட்டமிடலைப் பிடித்துக் கொடுத்து செயலாக்கும் திட்டம்…

* ஆதரவாளர்களை ஒருங்கிணைத்தல், அவர்களுக்கு திட்டமிடலைப் பிரித்துக் கொடுத்தல். ஒருவர் ஒருமுறை வெப் தளத்துக்குள் வந்தால், அவர்களின் அனைத்து தகவல்களையும் பெற்று, தொடர்ந்து தகவல்களை அளித்தல்…

* இணையதளங்கள் வாயிலாக, மின்னஞ்சல், விளம்பரங்கள் மூலம் என்று வாக்காளரைச் சென்றடைதல்…பேஸ்புக் போஸ்ட், டிவிட்டர், சர்வே முடிவுகள், வாக்குக் கணிப்பு, என்றெல்லாம் ஒரு கருத்தியல் தளத்தில் இயக்குவது…. கருத்துருவாக்கம் செய்வது..

* ஊடகங்களைக் கண்காணித்தல், எத்தகைய கருத்துகள் வருகின்றன… பிரேக்கிங் நியூஸ், செய்தித் தாள்கள் ஆகியவற்றை கண்காணித்தல், சமூக ஊடகங்கள், அவை தொடர்பான இணையதளங்கள், வலைப்பூக்கள், சமூக குழுக்கள், அரட்டை அறைகள், குழுக்கள், போஸ்ட்களை கண்காணித்தல், பதில் தரவுகள், ஃபீட்பேக்ஸ், கட்சி உறுப்பினர்களுடன் ஒருங்கிணைத்தல்…

* டிவி, ரேடியோ, அச்சு ஊடகம் செய்தித்தாள்கள் மூலம் ஆதரவான செய்திகளை உருவாக்குதல், அவற்றைப் பரப்பச் செய்தல், ஆன்லைன், வெப்சைட்கள் மூலம் பயனர்களை சென்றடைதல், அவர்களிடம் கருத்துருவாக்கம் செய்தல், யுடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியா ஆகியவற்றின் மூலம் கருத்து உருவாக்கம் செய்தல் என்று… பல…

* 2017 நவம்பரில் காங்கிரஸுக்காக நாடு தழுவிய அளவில் கருத்து எடுத்துள்ளதும், 2019க்கு தயார் செய்யும் தரவுகளை அளித்தலும் குறிப்பிடப் படுகிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை ஆக்கும் சதியை முறியடிப்போம்: இந்து முன்னணி!

* காங்கிரஸுக்காக கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா எப்படி வேலை செய்யும் முடியும் என்று கூறுகிறது…. அதற்காக, அமெரிக்கத் தேர்தலில் எப்படி தரவுகள் எடுத்தது, எப்படி வெற்றிச் சூத்திரத்தை அளித்தது என்றெல்லாம் குறிப்பிடப் படுகிறது.

* காங்கிரஸ் என்ற ப்ராண்ட் பில்டிங், பெயரை பிரபலப் படுத்தல், கட்சிக்காக நிதி திரட்டல்…

* பத்திரிகை வெளியீட்டாளர்களுடன் நேரடி தொடர்பு கொள்தல், ஊடகங்களுடன் கைகோத்து திட்டமிடல், கருத்துப் பரவலாக்கம் செய்ய பிரசாரத் திட்டம், சமூக ஊட்கா பிரசாரங்கள், விளம்பரங்கள்.. (சித்தராமையா குறித்த ஆன்லைன் விளம்பரங்கள் அண்மைக் காலமாக இந்த திட்டத்தின் கீழ் அதிகம் வெளியாகின்றன)

* கர்நாடக, ம.பி., சட்டீஸ்கர் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய அவசியம்… அதன் பின்னரே 2019 தேர்தலை முன்னெடுத்தல்

* கர்நாடக தேர்தலில் எப்படி நடந்து கொள்வது, எப்படி எதிர்கொள்வது, பிரசாரம் செய்வது எந்த வகையில், ராகுல் காந்தி எப்படி நடந்து கொள்ள வேண்டும்.. என்ன பேச வேண்டும்… (விமானக் கோளாறு… சற்றே யோசிக்கத் தூண்டுகிறது, மதப் பிரிவினைவாதம், லிங்காயத் பிரிவினைவாதம்… இப்படி பல சதிகள்…)

– மேற்கண்டவை எல்லாம் காங்கிரஸுக்காக கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் அரசியல் பிரிவு கொடுத்த ஆலோசனைகள், திட்டமிடல் தான். அண்மையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த அமைப்பின் செயல் அதிகாரியை, தலைவரை சந்தித்துப் பேசிய தகவல்கள் வெளியாகின.

காஷ்மீர் கதுவா சிறுமி பாலியல் விவகாரம் தொடங்கி, தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நடக்கும் போராட்டங்கள் வரை, இந்தத் தேர்தல்களை மையமாகக் கொண்டே திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றை எதிர்கொள்ள பாஜக., தன் வழிகளைக் கையாள்கிறது. நீதித்துறையில் உள்ள காங்கிரஸ் சார்பு நீதிபதிகள் கொண்டு உச்சநீதிமன்றத்தில் கலகம் விளைவித்தார்கள். நீதிபதியை பதவியிறக்க மனு போட்டார்கள். எல்லாமே இந்த அரசியல் சதித் திட்டமிடலின் ஓர் அங்கம்தான் என்கிறார்கள்.

இந்தத் திட்டமிடல் மூலம், பாரம்பரிய வாக்காளர் மனநிலை கொண்டு தேர்தலை அணுகாமல், திட்டமிட்ட அறிவியல் பூர்வமான தரவுகள் கொண்டு, எப்படி செய்தால் வாக்காளர் மனநிலை எப்படி மாறும் என்ற திட்டமிட்ட ரீதியில், பல்வேறு பொய்களைப் பரப்பி, ஒரு சதிவேலையை காங்கிரஸும் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவும் பின்னிவருவது இதன் மூலம் உறுதியாகிறது. காங்கிரஸின் இத்தகைய அபாயகரமான அணுகுமுறை, மீண்டும் அன்னிய சக்திகளிடம் நாடு அடிமைப் படுவதை உறுதி செய்கிறது. இந்த அபாயகரமான சூழலில் இருந்து நாடு எப்படி மீளப் போகிறது?! நம் முன் உள்ள கேள்வி இதுதான்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here