தமிழக அரசியலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்கள் செல்வாக்கு பெற்று முக்கிய இடத்தை பிடித்தார்.
கடந்த சில வருடங்களாக விஜயகாந்தின் பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டு குரல் வளமும் குறைந்தது . பொது இடங்களில் அவரால் நீண்ட நேரம் பேச முடியாத நிலை ஏற்பட்டது. பொதுக் கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளை கூட அவர் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தனர் . அவரது உடல்நிலையில் முன்னேற்ற அடைய தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இந்நிலையில் அவர் கடந்த ஜூலை 7 ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார் .

அவருக்கு தைராய்டு, குரல் வளம் குறித்த பிரச்சனைகள் இருப்பதால் அதற்கான சிகிச்சைக்காக சென்றார் .
அமரிக்காவில் இருந்தாலும் தமிழக அரசியல் நிலவரங்கள் ,பொன்மணிக்கவேலுக்கு ஆதரவு என அறிக்கைகளை அவர் வெளியிட தவறவில்லை ,மேலும் கலைஞர் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்து இருக்கிறார் இந்நிலையில் சற்று முன் அவர் தனது குடும்பத்தோடு இருக்கும் படங்கள் வெளியாகி வைராலாகி வருகிறது




