எத்தனை பேர் பசியோடு இருப்பார்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் கோயிலில் சிலைகளுக்கு பாலை ஊற்றி வீணாக்குகிறார்களே என்று ஈவெராவிய பகுத்தறிவாளர்கள் புலம்புவார்கள்.
இந்த உலகில் பொருளாதாரம் கறாரான இலட்சியவாதத்துடன் இயங்குவதில்லை.
தனிமனிதன் தனது மனநிலை, விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே இயங்குவான்.கோயில் சிலைகளுக்குப் பால் ஊற்றாமல் அதை வேறு யாருக்கும் கொடுங்கள் என்று கூறினால் அதைச் செய்யப்போவது சிலரே.
கோயிலுக்கு பால் அளிப்பவர்களில் பெரும்பாலானோர் அதைச் செய்யாமல் நிறுத்திவிடுவார்கள்.கோயிலில் பயன்படுத்தப்படும் மிகையான பால் உற்பத்தி படிப்படியாக இல்லாமல் போய்விடும்.
ஏனென்றால் அது நம்பிக்கையின் அடிப்படையில் உருவான பொருளாதாரம், அதை மனிதாபிமான அடிப்படையில் மாற்றமுற்பட்டால் அந்தப் பொருளாதாரம் நசிந்துவிடும்.
பொருளாதாரத்தின் ஓட்டத்தில் பெரும்பங்காற்றும் தனிமனித விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொள்ளாமல் இலட்சிய மனிதராக எல்லா மனிதரையும் உருவகித்து, மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்க முயன்ற சோஷலிசப் பொருளாதார முறை தோல்வியடைந்ததும் பேரழிவை ஏற்படுத்தியதும் வரலாறு.
கோயிலுக்கு செல்லும் பால் வீணாகிறதா?
பால் வீணாகிறது என்பது மேம்போக்கான சிந்தனை.கோயில்கள் பாலுற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட அளவு பால் தொடர்ந்து வாங்கப்படுவதை பாலுற்பத்தியாளருக்கு உறுதிப்படுத்துகின்றன.
மாடு வளர்ப்போருக்கு அந்தப் பணம் கிடைக்கிறது.அவன் குடும்பம் பசியாறுகிறது.கோயில்கள் பணச் சுற்றோட்டத்தை உறுதிப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான பங்கையளிக்கின்றன.அந்தப் பொருளாதாரம் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகின்றது.
அது மனிதாபிமான இலட்சிய அடிப்படையில் இயங்கவில்லை என்று புலம்பி அதை நாசம் செய்வது மனிதாபிமானத்துக்கு எதிராக முடிவடையும்.
பூனை வெள்ளையா கறுப்பா என்று கவலைப்பட்டுக்கொண்டு விவாதித்துக்கொண்டு இருப்பது முட்டாள்தனம்.அது எலியைப் பிடித்தால் சரி.இப்படித்தான் அந்தப் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இப்போது தீராவிட போலிப் பகுத்தறிவின் மூட நம்பிக்கை ஒன்றைப் பார்ப்போம்.
அண்ணா கொடுத்த மோதிரம் என்று ஒரு மோதிரத்தை கருணாநிதியின் பிணத்துடன் புதைத்துள்ளார்கள்.அதை அந்த சடம்தான் உணருமா அல்லது மோதிரம்தான் அறியுமா!
எவ்வளவு கேவலமான மூடநம்பிக்கை.எகிப்தின் மம்மிகளுடன் அவர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்துப் புதைத்த 5000 வருடங்களுக்கு முற்பட்ட சிந்தனை வளர்ச்சியற்ற மூடத்தனத்தை, இன்றைய நவீன காலத்தில் இந்தக் காட்டுமிராண்டித் தீராவிடக் கூட்டம் பின்பற்றியுள்ளது.
அந்த மோதிரத்தை கழற்றி யாராவது ஏழைத் திமுக தொண்டனிடம் கொடுத்திருந்தால் அவன் எவ்வளவு மகிழ்ந்திருப்பான்.
கருணாவின் குடும்பம் ஆசியாவின் கோடீஸ்வரர் வரிசையில் இருப்பதற்கு கருணாவுக்காகத் தீக்குளித்து இறந்த எத்தனையோ அப்பாவித் தொண்டர்களில் ஒருவனின் குடும்பத்துக்கு அதைக் கொடுத்திருக்கலாமே!
– ந. சிவேந்திரன்




