அவரவர் அடுத்தவரை நன்றாகத் தெரிந்து கொண்டு நடந்தால்…!?

Published:

06 Auguest 01 Tamilisai - 2026

பசு பயங்கரமாக முட்டியதால் பாஜக எம்பி மருத்துவமனையில் அனுமதி…!

குஜராத்தில் படான் தொகுதி பாஜக எம்பி லீலாதர் வகேலாவை பசு தன் கொம்புகளால் பயங்கரமாகக் குத்தியதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

விலா எலும்பு வரை பசுவின் கொம்பு பாய்ந்ததால் லீலாதரின் நிலைமை சீரியஸ்

என்னதான் தெய்வ நிலைக்கு உயர்த்தி நாம் கும்பிட்டாலும் மாடு மாடுதான்..! அதன் இயல்பு அறிந்து அணுக வேண்டும்! மாட்டை நாம் தெய்வமாகப் பார்த்தாலும், மாடுக்கு அன்னியன் ஒரு துன்புறுத்தும் மனிதன் தான்!

“தான் குத்தியது பாஜக எம்பியை” என்பது அந்த மாட்டுக்குத் தெரிவதைவிட, அது பழக்கப்படாத மாடுதான் என்பதை பாஜகவினர் புரிந்துகொள்ள வேண்டும்!

***

தமிழக பெண் காவல்துறை அதிகாரியின் காக்கி சட்டையின் மீது கைவைத்து அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு எகிறிப் பாய்ந்ததாக, தமிழக பாஜக தலைவி தமிழிசை மீது குற்றச்சாட்டு; அவர் மீது நடவடிக்கை எடுக்க திமுக., உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை!

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

திராவிட இயக்க பின்னணி கொண்டவர்கள் அப்படித்தான் என்பதை, பாஜக., தலைவர்கள் உணர்ந்து கொள்வதும் அவசியம்!

என்னதான் அவர்களை உயர்த்தி வைத்து ஆராதித்தாலும், தி.க. திமுக.,காரர்கள் அவர்கள் அவர்களே!

தாங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் காலால் மிதிப்பது பாஜக.,வினரைத்தான் என்பது திமுக., காரர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதை விட, கட்டிப்பிடித்தாலும் எப்படியும் காலால் மிதிபடுவது நாம் தான் என்பது பாஜக.,காரர்களுக்கு நன்றாகத் தெரிய வேண்டும்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img