நரம்பு நோய்களை குணமாக்கும் திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார்!

அடடே... அப்படியா? ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

idukku pillaiyar temple - 2026

நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குகிறார் ஒரு பிள்ளையார். உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளதா? எனில்,  திருவண்ணாமலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் சந்நிதிக்குள் சென்று வாருங்கள். உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

திருவண்ணாமலையில் எத்தனையோ விநாயகர்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இடுக்குப் பிள்ளையார் தனித்துவம் கொண்டவர்தான். திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கத்தைக் கடந்ததும் வலது பக்கத்தில் இடுக்குப் பிள்ளையார் சந்நிதி உள்ளது.

இந்த இடுக்கு பிள்ளையார் சந்நிதிக்கு, ஒரு பகுதி வழியாக உள்ளே சென்று மறுபகுதி வழியாக வெளியேற வேண்டும். படுத்த நிலையில் ஊர்ந்தபடி உடலை குறுக்கிக் கொண்டுதான் இந்த பிள்ளையாருக்குள் நுழைந்து வெளியே வரமுடியும். இதனால் பெண்களுக்கு கர்ப்பப் பை கோளாறுகள் நீங்குவதாக நம்புகிறார்கள்.

நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தாலும் இடுக்கு பிள்ளையார் சந்நிதிக்குள் சென்று வந்தால் பலன் கிடைக்கும். இந்த இடுக்கு பிள்ளையாருக்குள் இடைக்காட்டு சித்தர் மூன்று யந்திரங்களை பதித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த யந்திரங்கள் தரும் அதிர்வு காரணமாகத்தான் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் விலகுவதாக நம்புகின்றனர் பக்தர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.