வழக்கம்போல்… கல்யாண வீட்டில் அரசியல்! சாடிஸ்ட் என மோடியைச் சொன்னதில் தவறில்லையாம்!

Published:

01 July31 M K Stalin - 2026

செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மஸ்தானின் மகன் மொக்தியார்அலி-ஜெமர்தாஜி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது பேசிய அவர் ஆட்சிக்கே வரமுடியாதவர்கள் ஆளும் கட்சியை குறைசொல்லும் போது ஆண்ட கட்சியை சேர்த்து குறை சொல்கின்றனர்.

மோடியை சாடிஸ்ட் என கூறியதில் தவறு இல்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வரவில்லை. ஆனால் குஜராத்தில் பாதிப்பு என்றால் உடனே பார்க்கிறார்.தனிப்பட்ட முறையில் அவரை டாடிஸ்ட் என கூறவில்லை. பிரதமர் என்பதாலே கூறினேன் என்றார்.

மேலும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பா.ஜ.க ஆட்சி இல்லாத நிலையை உருவாக்குவோம் என வழக்கம் போல் கல்யாண வீட்டில் அரசியல் உரை ஆற்றினார்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, ஏ.வா.வேலு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் முன்னாள் இன்னாள்: சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img