
மனோகர் பாரிக்கர் செய்த மாயங்கள் பல. அதில் ஒன்று, இந்தியரிடம் இருந்து நேராகவே பெறப்பட்ட ராணுவத்தினருக்கான ஷூக்கள், பின்னாளில் இஸ்ரேல் மூலம் பெறப்பட்டு, அதில் ஊழல் நடைபெற்றதை தடுத்ததுதான்!
இந்தியாவில் ஜெய்ப்பூரை சேர்ந்த உற்பத்தியாளர் ஒருவர் தாம் தயாரிக்கும் காலணிகளை இந்திய ராணுவத்திற்கு விற்பனை செய்து வந்தார். ஆனால் அவை நேரடியாக இந்திய ராணுவத்துக்கு வராமல் இஸ்ரேலில் உள்ள நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு அங்கிருந்து இந்திய ராணுவத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இது இந்திய விலையை விட பத்து மடங்கு அதிக விலையில் இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது
மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்கு ஒரு முறை இந்த தகவல் தெரிந்தது! உடனே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியை அழைத்தார் பாரிக்கர். அவரிடம் இது குறித்து விசாரித்தார். அப்போது அவர், தாம் ஒரு காலத்தில் இந்திய ராணுவத்திற்கு நேரடியாக ஷூக்களை விற்பனை செய்து வந்ததாகவும், ஆனால் ஒவ்வொரு கட்டமாக முறைகேடுகளால் தமக்கு பெரும் இழப்பு நேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்
காலணிகளின் சாம்பிள், ஒப்பந்தக் கேட்பு விலை, ஆர்டர் பதிவிடுவது, தொடர்ந்து தர பரிசோதனை, பின்னர் பணம் பெறும் நடைமுறை, இறுதிக்கட்ட விலை ஒப்பந்தப்புள்ளி பெறுதல் என எல்லாவற்றிலும் தடங்கல்கள் முறைகேடுகள் ஏற்பட்டதாகவும் ஒருமுறை ராணுவத்துக்கு விற்றால் அதற்காக பல மாதங்கள் பணத்தைப் பெறுவதில் காத்திருப்பதாகவும், இதில் ஊழல் அதிகம் நடைபெற்றதாகவும், ஆகவே தம்மால் நேரடியாக ராணுவத்துக்கு வழங்க முடியாமல் இஸ்ரேலில் உள்ள நிறுவனத்திற்கு வழங்கியதாகவும் அங்கிருந்து இந்திய ராணுவம் இவற்றை வாங்குவதாகவும் குறிப்பிட்டார்
உடனே மனோகர் பாரிக்கர் மீண்டும் நேரடியாக இந்திய ராணுவத்திற்கு விற்பனையை தொடங்குங்கள் என்றும் ஏதாவது பிரச்னை இருந்தாலும் பணம் பெறுவதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டாலும் யாராவது கமிஷன் கேட்டாலும் உடனே தமக்கு தெரியப்படுத்துமாறும் கூறினார்
இதையடுத்து அந்த நபரிடம் இருந்து ராணுவம் ஷூக்களை கொள்முதல் செய்தது. அதனால் ஒரு காலணியின் விலை 2,200 ரூபாய்க்கு கிடைத்தது. அதுவே முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 25 ஆயிரம் ரூபாய்க்கு இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது!
ரபேல் காந்தி ராகுல் ராகுல் என்று கத்துவது ஏன் என்பது இப்போது புரிகிறதா என்று கேட்கிறார்கள் வலைத்தளவாசிகள்! குறிப்பாக, வட மாநிலங்களில் உள்ளவர்கள், அண்மையில் ராகுலுக்கும் மனோகர் பாரீக்கருக்கும் இடையே நடைபெற்ற சர்ச்சையை அடுத்து, பாரிக்கரின் இரு வருடத்துக்கு முன்பு வந்த இந்தச் செய்தியை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பாரிக்கர் ராணுவ அமைச்சராக இருந்த போது, இடைத்தரகர் என்ற நிலையை ராணுவ கொள்முதலில் ஒழித்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
News Source:
https://www.quora.com/Is-Manohar-Parrikar-as-clean-as-he-seems




அமேஜிங௠…