#ஜாதிக்கலப்பு | Sri #APNSwami #Writes

                        ஜாதிக்கலப்பு

     காலையிலிருந்தே ஆகாயத்துக்கும் பூமிக்குமாக எகிறி குதித்துக் கொண்டிருந்தார் ஆத்மநாத ஐயர்.   திருநெல்வேலிகாரர் நல்ல ஆசாரமானவர். தினந்தோறும் காலையில் ஸந்த்யாவந்தனம் தொடங்கி, பூஜைகள் எதையும் விடாமல் செய்து வருபவர்.  ஆபிசிலும் discipline  உடையவர். மொத்தத்தில் வியட்நாம் வீடு சிவாஜியை imagine செய்து கொண்டால் நமது ஆத்மநாத ஐயர் தான்.

 “I am going to write a letter to the Government…” அந்த காலத்து British Englishஐ       அட்சரம் பிசகாமல் அதே Accentடோட அழுத்திச் சொன்னார்.

     “என்ன கவர்மெண்ட்?…… முட்டாள்கள், மடையர்கள்? ப்ளாஸ்டிக்கை ஒழிச்சா மட்டும் போதுமா!! இத ஒழிக்க வேணாமா? என்ன அயோக்யத்தனம்?!! பொறுக்க முடியல! Intolerable!!”

    இப்போ மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி தமிழயும், இங்க்லீஷையும் மாத்தி மாத்தி சொன்னார்.

ஜாதி கலப்படம், ஜாதி கலப்படம்.  I am going to write to the authorities…

    இந்த ப்ராம்மணன் எடுத்ததெற்கெல்லாம் குதிக்கும்னு மீனாட்சி மாமிக்குத் தெரியும்.  ஆனா, இவர் ஜாதி கலப்படம்னு சொன்னதும் மாமிக்கு பகீர்னுத்து!!

    ‘அமெரிக்கால படிக்கிற இவா பையன் வேங்கடேஷ் ஏதாவது ஏடாகூடம் பண்ணிட்டானா!!’

    “நேத்து கூட Skypeல Chat பண்ணச்சே ஒண்ணும் சொல்லலயே?!!”

    “இதென்ன சோதனை! இன்னிக்கு சனி ப்ரதோஷம். நெல்லயப்பருக்கு ஒரு விளக்கு போடணும். அப்படியே திருவேங்கடநாதபுரம் போய், பெருமாளயும் சேவிச்சுட்டு வரணும் மனசுக்குள் வேகமாக வேண்டிண்டாள்!!

    “Idiots…. Stupids…..” அதுக்குள்ள மாமாவின் அர்ச்சனைகள் again and again going on…….

    மாமியின் BP எகிறிண்டேயிருக்கு. வேண்டாத தெய்வமில்லை. வேங்கடேசும் நல்ல பையன் தானே! பெருமாளே!” மனசுக்குள் மறுபடியும் ப்ரார்த்தனை.

    “அதுல வேற இந்த மனுஷன் கோவத்துல கவர்மெண்டுக்கு mail அனுப்பி, அதுல ஏதவது ஜாதி சண்டை வந்துடுமோ! ப்ராம்மணன் எப்படாப்பா மாட்டுவான்னு எல்லாரும் காத்திண்டிருக்காளே! இந்த அசட்டு ப்ராம்மணன் ஏடாகூடமாக ஏதாவது பண்ணக்கூடாதே!!” மறுபடியும் ப்ரார்த்தனை.

    “ஏன்னா! என்னாச்சு? ஏதோ ஜாதி கீதீன்னு பேசறேளே! ஏதாவது ஜாதிக்கலவரமா?….. நமக்கெதுக்குன்னா வம்பு!!… “அட அசடேன்னு மனசுல சொல்லிண்டே, பொறுமையாக, பக்குவமாக ஆத்துக்காரருக்கு advice பண்ணா..

    “நீ சும்மாயிரு. இத நான் விடமாட்டேன்…. I will lodge the Complaint….” மறுபடியும் மேஜர் சுந்தர்ராஜன்.

    பொறுமையிழந்த மாமி, என்னான்னு சொல்லித் தொலையுங்கோளேன்னு கத்தினாள்….”

    இந்தக் கத்தலில் ச்ருதியிறங்கிய மாமா, மீனாட்சி! நேத்தி சாயங்கலம் மார்கெட்ல பூ வாங்கினேன் நன்னா மொக்கு, மொக்கா பாக்கவே நன்னா இருந்தது ரொம்ப நாளாச்சு… மொக்கு பூவுல பூஜை பண்ணின்னு, வாங்கிண்டு வந்தேன்“.

சரி, அதுக்கென்ன?” – மாமி.

    “அதுக்கென்னவா? நல்ல ஜாதிப்பூ… மலர்ந்தால், கமகமன்னு வாசனை வரும்னு பாத்தால், எல்லாம் கலப்பட பூ டி…. ஜாதிப்பூல மொத்தம் கலப்படம்….. எதுவுமே Original இல்ல… எல்லாம் காட்டுப்பூ… துளி கூட வாசன இல்ல… மொத்த பூவும் waste… definitely, I will complain to the authorities…..

     மாமா சொல்லச் சொல்ல, பழையபடி, இது பைத்தியம் … இத ஒண்ணும் பண்ண முடியாதுன்னு மாமி பேசாமல் திரும்பிச் சென்றாள்.  விஷயம் ஒண்ணும் பெரிசா இல்லேன்றதால சாயங்காலம் கோவிலுக்கு போறது கூட reconsideration தான்.

மாமா விடாமல் இங்கிலீஷில் பேசிக் கொண்டிருந்தார்.

இது ஜாதிக்கலப்பூ.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Sri APN Swami.

இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்..

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...