13 May28 Seeman - 2026

கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த பாமக., பிரமுகர் ராமலிங்கம் இஸ்லாமிய மதமாற்றத்தைத் தடுத்த காரணத்துக்காக காபிர் எனும் வகையில் அடிப்படைவாத பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப் பட்டார். ராமலிங்கம் படுகொலை நடந்து 3 நாட்கள் ஆன நிலையில் இன்று ஸ்டாலின் தன் கண்டனத்தை டிவிட்டர் பதிவின் வாயிலாகத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிலையில், கொலையுண்ட ராமலிங்கத்தின் வீட்டுக்கு உடனே சென்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா ஆறுதல் கூறினார். இந்நிலையில் பாமக., நிறுவுனர் ராமதாஸ், தம் கட்சி நிர்வாகி என்ற வகையில் கண்டன அறிக்கை வெளியிட்டார்.

வேறு எந்த அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இந்தச் சம்பவத்தில் கண்டனம் தெரிவிக்கவோ, அறிக்கை வெளியிடவோ இல்லை. இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல் வாயை மூடிக் கொண்டு கடந்துவிட்டன. அவர்களால் வளர்க்கப்பட்ட, வாங்கப்பட்ட, நடத்தப்படும் ஊடகங்களும் ராமலிங்கம் படுகொலை குறித்த செய்திகளில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, சின்னத்தம்பி யானைக்கு மணி மாட்டி விடலாமா, குப்பைக் கிடங்கில் பெண் தலை, அருகே கொலை, என்று தங்கள் சேனல் நேயர்களை முட்டாள்களாக்கி வந்தன.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

அதே நேரம் வட நாட்டு ஊடகங்களில் ராமலிங்கத்தின் படுகொலை குறித்தும், தமிழகத்தில் பெருகிவரும் மத பயங்கரவாதம் குறித்தும், மத பயங்கரவாதிகளின் தார்க்கோலுக்கு ஏற்ப ஸ்டலின் உள்ளிட்ட அரசியல் வாதிகள் நடனமாடுவதையும் குறித்து படு பயங்கர விமர்சனங்களை முன்வைத்தன.

இந்நிலையில், 3 நாட்கள் கழித்து இன்று ஸ்டாலின் கண்டனத்தை டிவிட்டர் பதிவில் வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

ராமலிங்கம் கொலையின் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனே கைது செய்யவேண்டும். வன்முறை என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல;ஒரு உயிரைப்பறித்து அதில் சுகம் காண்பது என்பது மிகக்கொடூரமான மனநிலையாகும். எதன் பொருட்டும் இதுபோன்ற படுகொலைகளை நியாயப்படுத்தவோ, சகித்துக்கொள்ளவோ முடியாது – என்று சீமான் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending