இந்தியன் எக்ஸ்ப்ரெ
மோடியின் பதில்: கேள்வி என்னமோ நல்லாத்தான் இருக்கு.ஆனால் என்னை நீங்கள் தொடர்ந்து அவதானித்து வந்தால் ஒன்று தெரிந்திருக்கும்.நான் தேர்தல் சமயம் தவிர மீதி நாட்களில் எதிர்கட்சியினரை பற்றி பேசுவதே இல்லை.அவர்கள் தேச நலன் குறித்து ஏதேனும் பேசியிருந்தால் அதற்கு பதில் கூறுவதாகவே என் பேச்சு அமைந்திருக்கும்.
மேலும் சுற்றுப்பயணம் யாவும் அரசாங்க திட்டங்கள் பூர்த்தியான பின்னர் அவற்றை துவக்கி வைக்கும் ஹோதாவில் செல்லுவேன்.
ஒரு நிகழ்ச்சி தண்ணீர் பற்றாக்குறை என்றால் அதனை ஒட்டி மட்டுமே பேசுவேன்.. உதாரணத்துக்குச் சொன்னேன்..அதாவது எந்த நோக்கத்துக்கு சென்றேனோ அதை தெளிவாக செய்து விட்டு திரும்புவேன்.நான் வளர்ச்சி,வளர்ச்சி இதனை மட்டுமே பேசுபவன். சும்மா விடுமுறை மாதிரி அரசு வாகனத்தில் செல்பவனல்ல நான்.
ஒரு பெரிய பத்திரிகை நிறுவனமாகிய உங்களுக்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்..INS விராட் பற்றிய ப்ரஸ்தாபம் எப்படி எழுந்தது தெரியுமா?
ஒரு பொதுக்கூட்டத்தில் ராஹுல் காந்தி”ராணுவம் ஒண்ணும் மோடி வீட்டு “jaagir”சொத்து இல்லை என்று சொன்னபோது!நான் உங்களை மாதிரி பெரிய பத்திரிகையாளர்கள் என்ன சொல்ராங்கன்னு பார்த்தேன்.நீங்கள்லாம் அதை கண்டுக்கவே இல்லை.
ஆனால் ஜார்க்கண்ட்ல பேசிய ராஹுல் காந்தி இதை மறுபடி ரிப்பீட் பண்னினதோடு மட்டுமல்லாமல் “மோடியின் இமேஜை நொறுக்குவேன்”என்று சொன்னபோதும் உங்கள் பத்திரிகை அவர் ராணுவத்தைப் பற்றி கூறியதை குறிப்பிடுவீர்களா என்று கவனித்தேன்.ஊஹும்!
ராஜிவ்காந்தியின் பேரை காப்பாற்றுங்கள் காப்பாற்றாமல் போங்கள்.அது உங்கள் பாடு.ஏன்னா அந்த விராட் மேட்டர்லாம் உங்க பத்திரிகையில கொட்டை எழுத்துல வந்தது.அப்போ வாயை மூடிட்டிருந்த நேவி ஆஃபிசர்லாம் இன்னிக்கு நாலு காலத்துக்கு இண்டர்வ்யூ கொடுத்துட்டு போகட்டும்.
அதெப்படிங்க?இதுவரை எந்த ஊழலும் என் மேல் இல்லாதபோது “கான் மார்க்கெட்”டில்லி லுட்யன்ஸ் மீடியால்லாம் மோடி திருடன் திருடன்னு சொல்லிட்டு இருக்கும்போதே!
அவங்க கஷ்டப்பட்டு காத்து வந்த ”மிஸ்டர்க்ளீன்” என்ற ராஜிவ் காந்தியின் வேஷம் கலைந்து உண்மை முகம் தெரியுது என்பதில்தான் அவர்கள் விசனம் அடங்கியிருக்கிரதே தவிர முந்நாள் பிரதமர் பற்றிய விமர்சனத்துக்கே அஞ்சுகின்ரனரே?
என்னுடைய இமேஜா? எதுவும் நான் வளர்த்துக்கொள்ளவில்லை. இக்கேள்விக்கு இதுதான் என் பதில்.மக்களுக்கு உண்மையான தகவல்களை கொண்டு செல்வது உங்களை மாதிரி பாரம்பரியமிக்க பத்திரிகையாளர்கள் பொறுப்புங்க!
##அதைச் செய்யுங்க!
– நாராயணன் சேஷாத்ரி




