உதயநிதியின் அடுத்த அதிரடி.. இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் லிஸ்ட் தயார்…!

Published:

uthayanethi 1 - 2026

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் கூட்டம்   இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற ஒருசில தினங்களிலேயே உதயநிதியின் அடுத்தடுத்த அதிரடிகளை கண்டு திமுக இளைஞர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

போன வாரம் உதயநிதிக்கு புதிய பொறுப்பு தரப்பட்டது. எனினும் இவருக்கு ஏன் இந்த பதவியை தர வேண்டும், கட்சிக்கு இதுவரை இவர் என்ன செய்துவிட்டார் என்ற கேள்விகள், விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இது எதையுமே காதில் வாங்கி கொள்ளாத உதயநிதி, அடுத்தடுத்த தனது வேலைகளில் பிசியாகி விட்டார்.

பொறுப்பேற்ற கையோடு தாத்தா அன்பழகன், அத்தை கனிமொழி, என்று பெரியவர்களிடம் ஆசி வாங்கிய கையோடு, அன்பாலயம் வந்துவிட்டார்.

uthanethi 2 - 2026

மாவட்ட, மாநில ரீதியான நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் இளைஞர் அணியை எப்படி பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசப்பட்டது.

கூட்டம் முடிந்ததுமே செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய போகிறேன் என்று அடுத்த அதிரடியை தெரிவித்தார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இப்போது, மாநிலம் முழுவதும் காலியாக உள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் பதவியை நிரப்புவது குறித்த வேலையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லை, சரியாக வேலைபார்க்காத, செயல்படாத நிர்வாகிகளையும் களையெடுக்க முடிவு செய்துள்ளாராம்.

அன்பில் மகேஷ் ஆரம்பத்தில் இருந்தே உதயநிதி ஸ்டாலினின் அனைத்து நடவடிக்கையிலும் அவருடைய நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்து வருகிறார்.

அதுபோலவே இந்த விவகாரத்திலும் துணை நின்று இதற்கான பணிகளை கவனிப்பதாக சொல்கிறார்கள்.

குஷியில் இளைஞர்கள் புது ரத்தம் பாய்ச்சும் வகையில் இந்த புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறும் என்றும், உதயநிதியின் ரசிகர் மன்றத்தில் திறம்பட செயல்படும் நபர்களும் நிர்வாகிகள் லிஸ்ட்டில் அநேகமாக இடம்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் 15 நாளில் புதிய நிர்வாகிகள் தேர்வு பட்டியல் ரெடியாகும் என்று சொல்லப்படுவதால், திமுக இளைஞர் அணி தரப்பினர் ஏக குஷியில் காணப்படுகின்றனர்.

Related articles

Recent articles

spot_img