
எனது மணிபர்சில் இருந்த பணத்தை எங்கே? என கேள்வி கேட்ட மனைவியின் மூக்கை கடுத்து குதறிய கணவன்.!!!
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கோடாசர் பகுதியைச் சேர்ந்த பெண் ரேஷ்மா குல்வானி. (வயது 40)
இவர் அங்குள்ள பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவரது கணவர் கைலாஷ் குமார் என்பவர் சமீப காலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர், இரு தினங்களுக்கு முன்னர் குல்வானியின் பர்சில் இருந்த ரூ.3 ஆயிரத்தை காணவில்லை.
இது தொடர்பாக கணவர் கைலாஷ்குமாரிடம் அவர் கேட்டுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. .
பணத்திருட்டு தொடர்பாக கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த கைலாஷ் குமார், மனைவியின் தலையைப்பிடித்து கீழே இழுத்துப் போட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், மனைவியின் மூக்கையும் கடித்து குதறினார்.

இவர்கள் இருவரின் தகராறு மற்றும் குல்வானியின் அழுகைக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து இருவரையும் விலக்கியுள்ளனர்.
மேலும், ரத்தக்காயங்களுடன் இருந்த குல்வானியை மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து, மருத்துவமனையில் குல்வானிக்கு மூக்கில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசாரிடம் குல்வானி புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து கைலாஷ் குமார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.



