கடந்த வாரம் தங்களது விடுமுறையைக் கழிக்க கேரளாவில் உள்ள வயநாடு சுற்றுலா தலத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இருவரும் தனிமையில் நடந்து வந்துள்ளார்.அப்போது உள்ளூரைச் சேர்ந்த சஜிவானந்தம் இருவரையும் வழிமறித்து நீங்கள் யார் எந்த ஊர் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் தமிழில் பதில் கூறியதால் அந்த நபர் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். சஜிவானந்தம் பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரது மனைவி ஏன் எங்களை அடிக்கிறீர்கள்? என கேட்டபோது அதற்கு அவரது மனைவியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் பலர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைகளில் பதிவேற்றியுள்ளனர். அந்த இடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அங்கு கூட்டம் சேர்ந்த்து.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து தம்பதியை தாக்கிய நபரை கைது செய்துள்ளனர். சஜிவானந்தம் அவர்கள் உறவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் .
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பலரால் பார்க்கப்பட்டு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ் பேசும் நபரை இந்த மாதிரியாக கேரளாவில் வைத்து தாக்கியதற்காக தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் கேரள மக்கள் மீது மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அந்த வீடியோவில் தம்பதியரை தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நபர்களை அவர்களது புகைப்படங்களை வைத்து வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.