சிறிய கோவில்களில் #பூஜை #செய்யும் #பூஜாரி #சாமி #ஆடும் #போது, பெரிய கோவிலில் மந்திரம் ஓதிபூஜைசெய்பவர் சாமி ஆடுவது இல்லை ஏன் ?

சிறிய கோவில்களில் #பூஜை #செய்யும் #பூஜாரி #சாமி #ஆடும் #போது, பெரிய கோவிலில் மந்திரம் ஓதிபூஜைசெய்பவர் சாமி ஆடுவது இல்லை ஏன் ?

நம்வழிபாட்டு முறைகள் வழிபாடுகள் எத்தனை வகைப்படும்.?

வழிபாடுகள், அக வழிபாடு, புற வழிபாடு, உருவ வழிபாடு, அருவ வழிபாடு, அரு உருவ வழிபாடு, குரு வழிபாடு, லிங்க வழிபாடு, எந்திர வழிபாடு, குடும்ப வழிபாடு (குல தெய்வ மற்றும் சிறு தெய்வ வழிபாடு), ஆலய வழிபாடு (பெரும் தெய்வ வழிபாடு), ஆத்மார்த்த வழிபாடு மற்றும் யாக வழிபாடு என்று பல்வகையாக பிரித்து
அறியப் படும்.

குல தெய்வ வழிபாடு என்றால் என்ன?

மேலே குறிப்பிட்டு உள்ள வழிபாட்டு முறையில், குடும்ப வழிபாடு என்பதே, குல தெய்வ மற்றும் சிறு தெய்வ வழிபாடு ஆகும்.

“இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்ப காலத்தும் துன்ப காலத்தும், ஆவிகளை ஒத்த சிறு தெய்வங்களுக்கு உணவு படைத்து காவு கொடுப்பது சிறு தெய்வ வழிபாடு“ என்பது பாவாணர் கூற்று.

பரமாத்மா அறிவிக்கவே ஜீவாத்மா அறியப் பெறுகிறது என்பது வேத தத்துவம்.

பரமாத்மாவின் தூண்டுதலால், அதர்மங்களை கண்டு ஆந்திரப் படுபவர்களாக இருந்து கொண்டு, தம் குடும்பத்தையும், குலத்தையும், கொள்ளயார், பகைவர், கொடிய விலங்குகள் ஆகியவற்றிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் உயிர்விட்ட தியாக உள்ளங்களை, மனித உருவில் வாழ்ந்த தெய்வங்களாக பீடம் அமைத்து, அவர்கள் உயிருடன் இருந்த காலத்தே உண்ட உணவு வகைகள், மது பானம், போன்றவை படைத்து வழிபடுவது குல தெய்வ மற்றும் சிறு தெய்வ வழிபாடுகளில் ஒருவகை.

உதாரணமாக தஞ்சை பகுதியில் காத்தவராயனும், மதுரை பகுதியில் மதுரை வீரனும், குமரி பகுதியில் சின்னதம்பியும், மேலாங்கோட்டு இயக்கியும், நெல்லை பகுதியில், முத்தாரம்மனும், சங்கிலி பூதத்தானும், தமிழகம் எங்கும் இன்னும் பலவும் இந்த வகை தெய்வங்கள் ஆகும்.

மற்றும் ஒரு வகை, வாழ்ந்து இருந்த போது, சமுதாய நன்மைக்காக அற்புத செயல்கள் செய்திருந்து, பின் மரணம் அடைந்த பின்னும், அதே வேட்கையில், ஆவி உலகை விரும்பி ஏற்றுக் கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகள் பூமியில் ஆவி உருவில் சுற்றித் திரிந்து, தன் குலம் தழைத்து இருப்பதற்கு உதவி செய்கின்றனர். அவர்களுக்கும் கோவில் கட்டி வழி பாடுகள் செய்யப் படுகின்றன.

உதாரணமாக போகர் முதலாய சித்தர்கள் மற்றும் அவ்வையும், திருக்குறள் தந்த திருவள்ளுவரும், கற்புக்கு அரசி கண்ணகியும், தேவரும், நல்லாட்சி தந்த காமராஜரும் இந்த வகை தெய்வங்கள் ஆகின்றனர்.

சில இடங்களில் குலதெய்வங்களுக்கு சிலைகள் அமைத்தும், நடுகல் நட்டும், வீரக்கல் நிறுவியும் ஊரை காக்கும் காவல் தெய்வ்களாக வழிபடப்பட்டு வருகின்றனர். போராட்டம்களில் அவர்களுக்கு உதவிய குதிரை, நாய் போன்ற விலங்குகளும் சிலை அமைத்து நன்றி பாராட்டப் பட்டு வருகிறது.

குல தெய்வ வழிபாட்டு நன்மைகள் என்ன?

குல தெய்வங்களும், சிறு தெய்வங்களும், தம்மை
ஆராதித்து வருபவர் குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, கெட்ட ஆவிகள், பேய்கள் ஆகியவற்றிடம் இருந்து பாதுகாக்கிறது.

தன்னை ஆராதித்து வரும் குடும்பங்களுக்கு உடல் உபாதை, மனக் கஷ்டம் போன்றவவற்றை குறைக்கவும், நீக்கவும் பிரயாசப் படுகின்றன. திருமண தடை போன்ற தடைகள் நீங்கவும், மேம்பட்ட கல்வி, குழந்தை பேறு, வேலை வாய்பு, தொழில் அபிவிருத்தி ஆகிய பல நன்மைகள் பெறவும் உதவி புரிகின்றன.

குல தெய்வ வழிபாடு இல்லாத குடும்பங்களில் என்னதான் செல்வம் இருந்தாலும், நிம்மதி இருக்காது. இனம் தெரியாத துன்பம் துரத்தி கொண்டே இருக்கும்.

அப்படி கஷ்டத்துக்கு உள்ளானார்கள் ஒரு முறை உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று படையல் போட்டு வழிபட்டு திரும்புங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும். மேலும் மேலும் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலிடும்.

குல தெய்வங்கள் வேறு பிதுர்கள் வேறு.

குல மற்றும் சிறு தெய்வங்கள், எ‌ல்லை அற்ற சக்தி உடைய பெரும் தெய்வங்களில் இருந்தும் மாறு பட்டாவை.

குல தெய்வங்கள் ஆவி உருவில் பூசாரி உடம்பில் வந்து அருள் வாக்கு சொல்லும் தன்மை உடையவை.
பெரும் தெய்வங்கள். அப்படி அல்ல. கோவில்களில் செய்யப்படும் அபிஷேக ஆராதனை மற்றும் இறைவனை புகழ்ந்து பாடும் வேத மந்திரங்களால் ஏற்படும் அதிர்வுகளால் மகிழும் இறைவன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டு இருக்கிறான் அன்றி அருள் வாக்கு சொல்வது இல்லை.

திருப்பதி, திருச்செந்தூர், காசி, ராமேஸ்வரம் போன்ற பெரும் தெய்வ கோவிலுக்கு செல்லும் முன், குலதெய்வத்தை வணங்கி விட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...