ஜகத் குரு என்கிற தன்னுடைய பொறுப்பை
எப்போதும் உணர்ந்தே உழைத்தவர் அந்த உத்தமர்
( எத்தனை கொடி ? எத்தனை சண்டை? இதில் யார் யோக்கியம்? எவ்வளவோ பார்த்தாச்சே. இன்னும் நம்பிக்கை சாகல்லே.) 2019 சுதந்திர தின போஸ்ட்.15-08-2019
காமகோடி கட்டுரையில் ‘ஜகத்குரு ஞாபகம்’-ஒரு பகுதி

.
இந்திய சுதந்திரத்தின் போது 1947ல் மஹா பெரியவாளுடைய வயசு 40. அப்போது அவர்
“இந்த நாள் பாரத வர்ஷம் சுதந்திரம் அடைஞ்சிருக்கு. இது போறாது. இந்த தேச அனைத்து மக்களும் ஒரே மனசோடும் இதயத்தோடும் பகவானை வேண்டிக்கணும். நமக்கு இன்னும் நிறைய ஆன்மீக பாதையில் முன்னேற திட மனசு, விடா முயற்சி, ஒத்துழைப்பு எல்லாம் அருளணும்னு பிரார்த்தனை பண்ணனும். “
பார்த்தீர்களா. நாட்டுக்கு சுபிட்சம் பணத்தில் அல்ல. வசதியில் அல்ல. என்று சுதந்திரத்தன்றே பெரியவா உணர்த்தியிருக்கா.
இன்னிக்கு நாடு கெட்டுக் குட்டிச்சுவராக போனதற்கு நாம் திருந்து எடுத்து அனுப்பிய நம்மோட பிரநிதிகள் தானே காரணம். அவர்களை அங்கு அனுப்பியது யார். நாம் தானே. தனது தலையிலே தானே மண்ணைப் போட்டுக்கொள்வதில் நமக்கு ஈடு யார்.? எத்தனை கோடி மக்கள்? இதில் கொஞ்சமாவது மனச்சாட்சிக்கு மட்டு பயந்து நல்லது செய்ய ஆளில்லையா? இதுக்கு எத்தனை கொடி ? எத்தனை சண்டை? இதில் யார் யோக்கியம்? எவ்வளவோ பார்த்தாச்சே. இன்னும் நம்பிக்கை சாகல்லே.
மஹா பெரியவா போல சில நடமாடும் தெய்வங்களாலே கொஞ்சமாவது இன்னும் மன சாட்சி இருக்கு. பெருகி வரச் செய்திருக்கிறார். 1957ல் பெரியவா பட்டத்துக்கு வந்த கோல்டன் ஜுபிலி விழா ஏற்பாட்டில் அவர் என்ன சொன்னார் என்பது நினைவு கொள்வோம்.
”மடத்துக்கு பொறுப்பேற்று 50 வருஷமாச்சு. இன்னும் எதிரே நிக்கற வேலை முடியலே. இதெல்லாம் செய்ய அதிகாரம் மட்டும் என்கிட்டே இருக்கு. பரவாயில்லே காலம் இன்னும் இருக்கே. இருந்துண்டே தான் இருக்கும். மனுஷாளைவிட அதுவாவது எடுத்துண்ட வேலை தொடர ஒத்துழைக்கணும்.”
இதுக்காக தான் தேசம் பூரா பெரியவா அலைஞ்சு அங்கங்கே லோக தர்மத்தை பரிபாலனம் பண்ணிண்டு வந்தா போல இருக்கு. நிறைய பக்தர்களை இந்த சேவையிலே ஊக்குவித்தார்கள். ஜகத் குரு என்கிற தன்னுடைய பொறுப்பை எப்போதும் உணர்ந்தே உழைத்தவர் அந்த உத்தமர்



