“தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய’-
இதுக்கு என்ன அர்த்தம்? =பெரியவா
(சரியாக விளக்கம் சொல்லாத பண்டிதர்களுக்கு பெரியவாளே சொன்ன அற்புத விளக்கம்)
.
.
சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்
………………….ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
பல வருஷங்களுக்கு முந்தைய செய்தி,
பெரியவா தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், நாலைந்து வித்வான்கள் -தரிசனத்துக்காக வந்தவர்கள் – உட்கார்ந்திருந்தார்கள்.
பேச்சு வாக்கில், “பக்தர்கள் நமஸ்காரம் பண்ணினால் நான், ‘நாராயண,நாராயண’ என்று சொல்லி ஆசீர்வதிக்கிறேன். சம்சாரிகளான நீங்கள் என்ன சொல்லி வாழ்த்துகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
“தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய” என்று சொல்லுகிறோம். அதுதான் வழக்கம்.
“அதற்கு என்ன அர்த்தம்?”
“நீண்ட நாட்கள் சௌக்கியமா இரு – என்று அர்த்தம்.”
அங்கிருந்த வித்வான்கள் எல்லோரையும் தனித்தனியே கேட்டார்கள் பெரியவா. எல்லோரும் அதே அர்த்தத்தைச் சொன்னார்கள்.
பெரியவா சில நிமிஷங்கள் மௌனமாக இருந்தார்கள். பின்னர் ” நீங்கள் அத்தனை பேரும் சொன்னது தவறான அர்த்தம்” என்றார்கள்.
பண்டிதர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.! எல்லோரும் படே,படே வித்வான்கள்,’சிரோமணி’ பெற்றவர்கள்.
“தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய’ என்ற சாதாரண சம்ஸ்க்ருத வாக்கியத்துக்கு, ஓரளவு வடமொழி பயின்றவர்களே கூடப் பொருள் சொல்லி விட முடியும்.அவ்வளவு எளிமையான சொற்கள்! ‘தவறு’ என்கிறார்களே, பெரியவா?
“நானே சொல்லிவிடட்டுமா?”
பண்டிதர்கள் செவிகளைத் தீட்டிக் கொண்டார்கள்.
“இருபத்தேழு யோகங்களில் ஒன்றின் பெயர் ஆயுஷ்மான் .பதினோரு கரணங்களில். பவ என்று ஒரு கரணம். வார நாட்களில் சௌம்ய வாஸரம்.- புதன் கிழமை வருகிறது. இந்த மூன்றும்- புதன்கிழமையில் ஆயுஷ்மான் யோகமும் பவகரணமும் சேர்ந்து வந்தால் அந்த நாள் ரொம்பவும் சிலாக்கியமாகச் சொல்லப்பட்டிருக்கு.
…வேகமா விருத்தி ஏற்படும்னு சொல்லுவா. .அதனாலே, இந்த மூணும் கூடி வந்தால் என்னென்ன நல்ல பலன்கள் கிடைக்குமோ , அதெல்லாம் உனக்குக் கிடைக்கட்டும் என்று ஆசீர்வாதம் பண்றேன்….”
வித்வான்கள் அத்தனை பேரும் ஒன்றாக எழுந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.
நாலைந்து சிரோமணிகள், ஐந்தாறு வித்யா வாசஸ்பதிகள் பட்டம் பெற்றவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கொண்டு வந்த வாக்கியத்துக்கு எவ்வளவு புஷ்டியான, ஆழமான பொருளைக் காட்டிக் கொடுத்துவிட்டது இந்த
‘”தீர்காயுஷ்மந் பவ சௌம்ய’



