“வாக்குண்டாம்-இனி முதல் பாடம் எங்கள் வீடுகளில்.”
(பெரியவாளின் தமிழ்ப் பற்று)
( வட மொழியின்பால் பெரும் பற்றுக் கொண்டவர்கள் என்ற கருத்து பரவியிருந்ததால்-[மூஷிக வாஹன..என்பது போன்ற] ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தைச்சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அருளிய ஔவையார் பாடல்.).(விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் போஸ்ட் 02-09-2019).(இது 2011 போஸ்ட்-
வரகூரான்)ஐந்து வயதுக் குழந்தையுடன் வந்து பெரியவாளை நமஸ்காரம் செய்தனர்
தம்பதியர்.”விஜயதசமி அன்னிக்கு அக்ஷராப்யாசம் செய்யணும்… நவராத்திரியின்போது,வீட்டை விட்டு வர முடியாது, பெரியவா அனுக்ரஹம் செய்யணும்.குழந்தைக்குப் படிப்பு நன்றாக வரணும்…”என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள்.
தகப்பன் மிகவும் பவ்யமாக, “பெரியவா…ஏதாவது ஒரு வார்த்தை… குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கணும்” என்று குழைந்தான்.
பெரியவா குழந்தையைத் தன் அருகில் அழைத்தார்கள்.
“சொல்லு……………….
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான்நோக்குண்டாம் மேனி நுடங்காது….. பூக்கொண்டு துப்பார் திருமேனிதும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
இது ஔவையார் பாட்டி பாடினது, தெரியுமா? தினம் சொல்லு…”
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சில தமிழறிஞர்களும் இருந்தார்கள்.பெரியவாள் வட மொழியின்பால் பெரும் பற்றுக் கொண்டவர்கள் என்ற கருத்து பரவியிருந்ததால்-[மூஷிக வாஹன..என்பது போன்ற] ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது”வாக்குண்டாம்…” என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்.தமிழறிஞர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.
“இது எங்களுக்கு ஓர் உபதேசம் மாதிரி.இனிமேல் எங்கள் வீடுகளில்வாக்குண்டாம்தான் முதல் பாடம்”என்று உள்ளார்ந்த பூரிப்புடன் பெரியவாளிடம் தெரிவித்துக் கொண்டார்கள்.
“வாக்குண்டாம்-இனி முதல் பாடம் எங்கள் வீடுகளில்.” (பெரியவாளின் தமிழ்ப் பற்று)
Popular Categories



