“இட்லி என்று எப்படி பெயர் வந்தது?”-(தன்னை தரிசனம் செய்ய வந்திருந்த பண்டிதர் ஒருவரிடம் இப்படிக் கேட்டார் மகா சுவாமிகள்)
. (ஒன்றை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வருவதை இடுதல் என்பார்கள்-பெரியவா விளக்கம்)
நன்றி-சக்தி விகடன்.
“இலையில் இட்டவுடன் இல்லைன்னு காலியாகிறது. இட்டு + இல்லை இட்டிலை… இட்டிலி…” என்றார் பண்டிதர்.
பெரியவா சற்று யோசனை செய்தார்.
“எல்லோரும் இலையில் இல்லைன்னு ஆக்கிடுவாளா… என்னைப் போல எத்தனையோ பேர் அதையும் வெச்சிண்டு உட்கார்ந்திருக்காளே! எனக்கு என்ன தோண்றதுன்னா, ஏதாவது சமைக்கறதுன்னா சிரமப்படணும். அடுப்புப் பக்கத்திலேயே நிக்கணும். இல்லேன்னா சமைக்கற பண்டம் கருகிப் போயிடலாம்.
ஆனா, இட்லிக்கு மட்டும் பானைல இட்டுட்டு பத்து நிமிஷம் அதை மறந்துட்டு, அதான்… இல்லைன்னு விட்டுட்டு அந்தப் பக்கம் போயிடலாம். இட்லி தானே பக்குவமாயிடும். ஒன்றை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வருவதை இடுதல் என்பார்கள். இடுகாடு, இடுமருந்து, இட்டிலி..” என்று பண்டிதருக்கு விளக்கம் தந்தார் பெரியவா.
“இட்லி என்று எப்படி பெயர் வந்தது?”-(தன்னை தரிசனம் செய்ய வந்திருந்த பண்டிதர் ஒருவரிடம் இப்படிக் கேட்டார் மகா சுவாமிகள்)
Popular Categories



