spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்அனுகூலம் செய்து தரும் அருந்தவத்தார்!

அனுகூலம் செய்து தரும் அருந்தவத்தார்!

- Advertisement -

சிங்கேரி பீடத்தை அலங்கரித்து வந்த சந்திர சேகர பாரதீ ஸ்வாமிகள் தன்னுடைய சரீரத்தை விடுவதற்கு முடிவு செய்தார் அதற்கான அறிகுறிகளையும் மற்றவர்களிடம் கூறிக்கொண்டிருந்தார்.

இருப்பினும் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உதாரணமாக இந்த உடல் யாருக்காவது உபயோகப்படும் காட்டில் விட்டால் மிருகங்களுக்கு இரையாக உபயோகப் படுத்துங்கள் ஆற்றில் விட்டால் மீன்களுக்கு உபயோகப்படும் என்று கூறிவந்தார். இதைப்போன்று அவர் கூறிக் கொண்டு வந்தாலும் அவர் தன் உடலை விடுவதற்கான முடிவெடுத்து விட்டார் என்று யாரும் நம்பவில்லை.

சிபி சி ராமசாமி ஐயர் ஸ்ரீசிங்கேரி வர விரும்பியதை ஆசார்யாளுக்கு தெரியப்படுத்தினார். ஆச்சாரியாளும் வருவதாக இருந்தால் ஒருவாரத்திற்குள் வருமாறு சொல்லி அனுப்பினார் ஆனால் ஒரு வாரத்திற்குள் அவரால் வரமுடியவில்லை வரமுடியாததற்காக அவர் வருத்தப்பட வேண்டி வந்தது

ஏனென்றால் ஆச்சாரியார் வருவதற்குள் மகா சமாதி அடைந்து விட்டார். ஆகஸ்ட் மாதம் 1954ஆம் வருடம் சர்மா என்பவர் ஆச்சாரியார் விட்டு விடைபெறும்போது ஆனந்த கண்ணீர் வடித்தார். அதற்கு ஆச்சாரியார் ஏன் வருந்கிறாய் அடுத்த முறை நீ வரும் பொழுது நான் இந்த உடலில் இருந்து விடுதலை பெற்று விடுவேன் அதன் பிறகு நீ எப்போது நினைத்தாலும் நான் அங்கு இருப்பேன் என்றார்.

அதற்கு ஷர்மா மரணம் ஒரு பிரமையை என ஆச்சார்யா பாடம் புகட்டுகிறார் என்று நினைத்தார். ஆச்சாரியார் உடலை விட்டு விடும் எண்ணம் கொண்டுள்ளார் என்று நினைக்கவில்லை அதே வருடம் ஜூலை மாதம் நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து விட்டதைப் போல் ஆச்சாரியார் நடந்து கொண்டார்.

தன்னிடம் பணிபுரிந்தவர்கள் எல்லோரிடமும் தன்னுடைய பேச்சு இனி முடிந்து விட்டது என்பதைப் போல் பேசிக்கொண்டிருந்தார் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் பாடசாலையிலேயே ஏழு நாட்களும் இருந்து தன்னுடைய தனிப்பட்ட அன்பை காட்டினார்.

நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களை எல்லாம் திருப்பி கொடுக்க ஆரம்பித்தார் யாருமே அவர் மனதில் உள்ளதை புரிந்து கொள்ளவில்லை செப்டம்பர் 21-ஆம் தேதி ஆச்சாரியாள் எப்பொழுதும் போல காரியங்கள் செய்து கொண்டிருந்தார். காலை 11 மணிக்கு சாரதாம்பாள் தரிசனம் செய்தார் பிறகு பிரகாரத்தைச் சுற்றி வரும்பொழுது வீரணா, கவுடா என்ற இரண்டு பேருடன் பேசிக் கொண்டிருந்தார்.

திரும்பவும் இருவருக்கும் பிரசாதம் கொடுத்தார் அம்பாள் கோவிலில் இருந்து வித்யாஷங்கர் கோவிலுக்குச் சென்று பிரதக்ஷணம் செய்தார் அதன் பிறகு போக்குவரத்து அமைச்சர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார் மாலை துறையின் வடக்கு கரையை சென்றடைந்து நீதிபதியும் மல்லையா நண்பருடன் ஒரு இன்டர்வியூ வைத்துக்கொண்டார்.

சற்று காலதாமதம் செய்ததால் ஆச்சாரியார் சற்று பொறுமை இழந்தவராய், அவர் சென்றவுடன் படகில் ஆற்றை கடந்து விட்டார் பிறகு நரசிம்ம வனத்தில் நேரம் தன் குரு சமாதி அருகில் பிரார்த்தனை செய்தபடி இருந்தார். வேலையில் இருக்கும் பணியாள் ஆசாரியரை வணங்கி விட்டு கதவை மூடுவது வழக்கம்.

அன்று ராமசாமி என்பவருக்கு வேலை ஆச்சாரியார் தானாகவே அந்த மனிதரின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார் இது அபூர்வமானது ஆச்சாரியாள் ஒரு சில வார்த்தைகள் பேசக் கூடியவர் அன்று இரவு ஆசாரியனுக்கு கொடுக்கப்பட்ட பால் பழங்கள் எதையும் சாப்பிடவில்லை.

மறுநாள் செப்டம்பர் 26 மிகச் சீக்கிரமாகவே ஆச்சாரியாள் எழுந்துவிட்டார் அங்கு சச்சிதானந்த விலாஸின் பாதையில் ,, முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தார் அன்று ராமசாமி என்பவருக்கும் மகா பட்டா என்பவருக்கும் ஆச்சாரியாள் அருகிலிருந்து கவனித்துக்கொள்ளும் வேலை இருந்தது.

மகா பட்டாவிற்கு கர்ப்பதிக்‌ஷை இருந்ததா மடி வேலையை ராமசாமியை பார்க்க வேண்டியிருந்தது. ஆச்சாரியாள் காலை ஐந்தரை மணிக்கு தூங்கச் சென்றார். அப்பொழுது விடியவில்லை நதியிலும் வெள்ளம் மிகுதியாக இல்லை.

ஆச்சாரியாள் படிகளில் இறங்கி இறங்கினார் மஹாபல பட்டா சிறிது நேரத்தில் குருநாதர் இல்லை என்பதை கண்டு பிடித்து விட்டார். கஷ்டப்பட்டு தேடியதில் ஆச்சாரியாள் நதியில் மிதப்பதை கண்டார். மஹாபல பட்டாகும் நதியில் குதித்துவிட்டார்.

ராமசாமியும் குளித்து முடித்துவிட்டு நதிக்கரைக்கு வந்துவிட்டார் ராமசாமிக்கு நீச்சல் தெரியாததால் கரையிலே இருந்தபடி கத்தி கூச்சலிட்டார். எதிர் கரையில் இருந்த ஒரு மனிதர் ஆச்சாரியாளின் உடலை கரைக்கு கொண்டு வந்தார் ஆச்சாரியார் கால்கள் பத்மாசனத்தில் இருந்தது. மூச்சுத்திணறி உயிர் விட்டதற்கான அறிகுறி இல்லை

அவர் முகமும் சாதாரணமாகவே இருந்தது சிறிது நேரத்தில் வடக்கு கரையில் நவராத்திரி விழாவிற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த மகா சன்னிதானம் செய்தியை கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்து ஆச்சாரியாளை தடவிக் கொடுத்தார்

ஆச்சரியாள் உடலை சோதித்த மருத்துவர்கள் ஆச்சரியத்திற்கு இடமாக ஒர் சிறு துளி நீர் கூட அவர் உடம்பில் இல்லை என்பதை கண்டுபிடித்தனர். ஆச்சாரியாள் அவர் விரும்பியே உடல் விட்டதற்கான அடையாளம் இது என்பதை காட்டுகிறது.

அடுத்து சந்தனக் கட்டையில் கிடத்தி சந்திரமௌலீஸ்வரர் தொட்டி என்ற இடத்தில் வைத்தனர் காலை 9 மணி வாக்கில் மக்கள் வரத்தொடங்கினர் ஆசார்யாளுக்கு மகாசந்நிதானம் கடைசி காரியங்களை செய்து வைத்தார். ஆச்சாரியாள் உடலுக்கு பஸ்மம் துளசி ருத்ராக்ஷம் சந்தனம் வைத்தனர் ஆதி சங்கர பகவத்பாதாள் கோயில் அருகே வைத்து கமண்டல தீர்த்தம் விட்டனர்.

மகா சன்னிதானம் பஞ்சாமிர்த பூஜை செய்து வைத்தார் இதன்பிறகு ஒரு வெள்ளிப் பல்லக்கில் ஆச்சாரியார் உடலை வைத்து சிங்கேரி முழுக்க சுத்தி வரப்பட்டது. எல்லா மக்களும் அழுதபடி இருந்தனர்.

இதன் பிறகு நரசிம்மம் சென்றார்கள் அங்கு இறுதி காரியம் செய்துவிட்டு ஆச்சாரியாரின் குருவின் சமாதி அருகிலேயே ஆச்சாரியாளையும் அடக்கம் செய்ய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சாரியாரின் தண்டம் மூன்றாக உடைக்கப்பட்டு அவர் பாதத்தில் வைக்கப்பட்டது.

பிறகு ஆச்சாரியார் உடல் வைக்க வேண்டிய இடத்தில் உப்பு வைக்கப்பட்டது மண்டை ஓட்டை உடைத்தனர் ஞானிக்கு வாய்வழியாக உயிர் போவதில்லை ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தேங்காயை முதல் தடவை உடைக்கும் பொழுது தலை உடைந்து விட்டது.

இதன் மூலம் ஆச்சாரியாள் விருப்பப்பட்டே தன் உடலை விட்டதற்கான அறிகுறியாகும். சமாதியை மணலை வைத்து மூடி அதன் மேல் பானலிங்கம் வைத்தனர் அதன்பிறகு பூஜையும் தீபாராதனையும் காட்டப்பட்டது. நிறைய சன்மானங்கள் கொடுக்கப்பட்டது.

சன்னியாசிகளை மரணத்தை எண்ணி விடக்கூடாது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆச்சாரியாள் இறைவனுடன் கலந்துவிட்டார் ஆச்சாரியாள் குருவின் சமாதி அருகே புதைக்கப்பட்டதற்கு பின்னாலும் ஒரு சம்பவம் உண்டு.

ஒரு சமயம் குருவின் அருகில் குழி தோண்டும் பொழுது அந்த குழியை தோண்ட வேண்டாம் என்று அப்பொழுது ஆச்சாரியார்கள் சொன்னார்கள். அது ஏற்கனவே வேறு ஒன்றுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்கள் ஆச்சரியமாக ஆசாரியாள் தேர்ந்தெடுத்து அந்த இடமே அவர்களது கடைசி அடக்கம் செய்தனர்.

ஆச்சாரியாள் மகா சமாதி அடைந்த தினம் அன்று மாளயஅமாவாசை சாரதாம்பாளை வருடத்தில் ஐந்து நாளைக்கு அபிஷேகம் செய்யும் நாட்களில் அதுவும் ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe