பச்சை சாத்தியில் செந்தூர் முருகன்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஆலயங்கள் சற்றுமுன் விழாக்கள் விசேஷங்கள்
green satthi - 2026

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு இன்று அருள்பாலிப்பார்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

8-ம் திருநாளை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் சுவாமி சண்முகர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெள்ளை மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்தில் இன்று மாலை பச்சை சாத்தியுடன் எழுந்தருளுவார். . மதியம் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி, பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.