April 26, 2025, 12:09 AM
30.2 C
Chennai

இன்று நரசிம்ம ஜெயந்தி: கடன் தொல்லை முதல் அனைத்து கஷ்டமும் தீர… ப்ரகலாத வரதனை வழிபடுவோம்!

narachimar

வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலைஅந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.

நரசிம்ம ஜெயந்தியன்று பக்தர்கள் அதிகாலை குளித்து வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் சுவாமி படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்று பகல் முழுவதும் உணவின்றி நீராகாரமாக பருகி, நரசிம்மர் ஸ்தோத்திரம் கூறி வழிபடலாம். அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் வழிபட வேண்டும். விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம்.

narachimar 3

நரசிம்மர் இரணிய வதம் செய்ய பிரகலாதனுக்கு காட்சி தந்த அற்புத பகவான் நரசிம்மர் சிங்க முகமும் மனித உடலும் அவதரித்ததால் நரசிம்மர் என்று அழைக்கப்பட்டார். தசாவதாரத்தில் முக்கியமான அவதாரம். இவரது நட்சத்திரம் சுவாதி.

இவரது நட்சத்திரத்தில், இவரை வழிபடுவதால் நமக்கு ஏற்படும் பேய் பிசாசு சொப்பனம், தீராத வியாதி, கடன் தொல்லை, எதிரி தொல்லை, நவகிரக தோஷங்கள் போன்றவை நிவர்த்தி ஆகும்.

நரசிம்மர் யோக நிலையில் சோளிங்கபுரத்திலும் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் பழைய ஸ்வரத்தில் லக்ஷ்மி உடனும், அகோபிலத்தில் ஆந்திராவில் மங்களகிரி எனும் இடத்தில் பாதுகா நரசிம்மராகவும் சிங்கப்பெருமாள் கோவில் என்னும் ஊரில் குடையப்பட்ட மலையில் விஸ்வரூபம் ஆகவும் உள்ளார்.

narachimar 2

இந்த தெய்வத்தை பிரதி வியாழன் பிரதி பிரதி மாதம் திருவோண நட்சத்திரம் சுவாதி நட்சத்திர காலங்களிலும் அம்மாவாசை பஞ்சமி காலங்களிலும் வீட்டில் வைத்து அவர் முன் ஒரு மனையில் நீரினால் கழுவி அரிசியுடன் சர்க்கரை கலந்து கோலம் போட்டு பானகம் அல்லது சக்கரை பொங்கல் வைத்து வழிபட மனநிலை சரியில்லாதவர், பயம் உள்ள வீடு, துர்மரணம், தனுர் தோஷம் உள்ள வீடு, பாலாரிஷ்டம் அதிகம் உள்ள குழந்தைகள் உள்ள வீடு, சச்சரவு அதிகமான குடும்பங்கள் க்ஷேமம் பெறும்.

ALSO READ:  சோழவந்தானில் ஜெனக புஷ்ப கண்ணன் நூதனப் பிரதிஷ்டை விழா

இப்படி வாரம் ஒரு முறை செய்தால் நனமி உண்டாகும். நரசிம்ம பெருமானுக்கு விசேஷமானது உளுந்து வடை பால் அன்னம் நெய் பொங்கல் வெற்றிலை மாலை பானகம் முக்கியமான நிவேதனமாக படைப்பார்கள். காலை சூரிய உதயம் முன் இவரது பூஜையை ஆரம்பித்து சூரிய உதயத்தின் நேரத்தில் முடிப்பதில் சகல சௌபாக்கியமும் உங்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் புத்திர தோஷம் பித்ரு சாபம் உள்ளவர்கள் கட்டாயம் வழிபட நன்மை உண்டாகும்.

narachimar 1

வியாழக்கிழமை தோறும் பூஜைக்கு உகந்தது நரசிம்மர் விக்ரகத்தை வீட்டில் வைத்து பால் தயிர் தேன் பன்னீர் அரச்ச சந்தனம் அபிஷேகம் செய்து குங்குமம் அல்லது துளசி அர்ச்சனை செய்து வந்தால் தசாபுத்தி கோச்சார பல தோஷங்கள் நீங்கும் திருமணம் ஆகாத ஆண் பெண் வியாழன் ஞாயிறு விரதம் இருந்து மாலையில் நரசிம்மரை வணங்கி பானகம் வைத்து பிரசாதமாக தர மேன்மை உண்டாகும் சனி புதன் குரு கேது தோஷம் உள்ளவர்கள் நரசிம்மர் வழிபாட்டை பின்பற்றலாம்

ALSO READ:  மதுரை ஆலயங்களில் மஹா சிவராத்திரி; ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

பெண்கள் பயபக்தியுடன் இவரை வீட்டில் வைத்து பிரார்த்தனை செய்ய கட்டாயம் காரியசித்தி ஏற்படும் மானசீக தோஷங்கள் உள்ள எல்லா இடங்களிலும் இந்த சம்பிரதாயம் இருக்கிறது கருணைமழை பொழியவே அவதாரம் பல எடுத்தார்கள் அவதாரங்கள் மாநிலத்துக்கு ஏற்ப பல கட்டங்களாகப் பிரிக்கிறது பயமின்றி நரசிம்மரை நம் இல்லத்தில் வைத்து வழிபடலாம்.

அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை விரதம் வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். அவரது படத்தை பூஜை அறையில் கிழக்குநோக்கி வைக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.

‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.

ALSO READ:  ஏப்.7ல் திட்டமிட்டபடி தென்காசி கோயில் கும்பாபிஷேகம்! நீதிமன்ற தடை நீக்கம்!

இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.

மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹவித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹஇதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ,யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹ,நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories