
சுந்தன் உபசுந்தன் என்ற இரண்டு அரக்க சகோதரர்கள் கடுமையாகத் தவம் புரிந்தார்கள்.
அவர்கள் தவத்தின் பலனாய் பிரம்மா தோன்றி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு கூறினார். என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று அந்த அரக்கர்கள் கேட்டனர். பிரம்மா மனிதன் இறப்பிற்கு கட்டுப்படாமல் இருப்பது என்பது முடியாத காரியம் என்று கூறினார். அப்படி நாங்கள் இருந்துதான் ஆக வேண்டும் என்றால் நாங்கள் தான் எங்களுக்கு இறப்பை தரிவித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அவர்கள் வேண்டுகோளை ஏற்றார் சுந்தன் உபசுந்தன் ஒருவருக்கு ஒருவர் பாசத்தோடு இருக்கிறோம் நாம் என்றும் சண்டை போட்டுக் கொள்ளவே மாட்டோம் ஆகையால் மரணமானது அணுக முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
சீக்கிரத்திலே அவர்கள் எல்லா ஜனங்களையும் பயமுறுத்த தொடங்கினார்கள். இந்திரன், தேவர்கள் எல்லோரையும் தம்முடன் அழைத்துக்கொண்டு பிரம்மாவிடம் சென்று இந்த துன்பத்திலிருந்து விடுதலை தருமாறு பணிவுடன் வேண்டிக் கொண்டனர்.

பிரம்மா தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவினை அழைத்து வசீகரமான அழகியைப் அடைக்குமாறு கூறினார் அந்த தேவலோக அழகியான திலோத்தமையை அவர்களிடம் செல்லுமாறு பணித்தார்.
திலோத்தமையைக் கண்டதும் அவர்கள் இருவரும் அவளிடம் எல்லையில்லா காமத்தை அடைந்தார்கள் நான் தான் முதலில் பார்த்தேன் ஆகையால் இவள் எனக்குத்தான் சொந்தமானவள் என்று கூறினான் சுந்தன்.
இல்லை நான் தான் முதலில் பேசினேன் எனக்குத்தான் என்று உபசுந்தன் கூச்சலிட்டான்.
முதலில் நான்தான் நான்தான் என்று இவ்விரு அரக்கர்களின் வாக்குவாதங்களை கேட்டுக்கொண்டிருந்த திலோத்தமா தங்களில் யார் அதிக பலசாலியோ அவரை நான் மணந்து கொள்கிறேன் என்று கூறினாள்.
அவளின் அழகில் மயங்கிப் போயிருந்த அரக்கர்கள் தாங்கள் சகோதரர்கள் என்பதையோ, தங்களுக்குள் சண்டை வராது என தாங்கள் இருமாந்திருந்ததையோ, தங்களின் சாவிற்கு தாங்களே காரணமாக இருப்போம் என்ற தவம் புரிந்து வாங்கிய வரத்தையோ மறந்தனர்.

கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டார்கள். வெகுநேரம் பயங்கரமாக சண்டையிட்ட இருவரும் ரத்த வெள்ளத்தில் மூழ்கி மாண்டு போனார்கள். ஒருவன் எவ்வளவுதான் பலசாலியாக இருந்தாலும் கடுமையான தவம் முதலியன அவர்கள் செய்து வரம் முதலியன பெற்றிருந்தாலும் காம வசப்பட்டு கர்வத்தோடு நடந்து கொண்டால் அவன் அழிந்து போவது திண்ணம்.
அதனால் ஒருவர் தன் காம இச்சைகளை ஜெயிக்கின்ற வைராக்கயத்தை வளர்த்துக் கொண்டு தெய்வ சிந்தனையில் காலத்தை கழித்தால் இறைவன் நமக்கு எல்லா விதமான நலன்களையும் கொடுத்து அருள் புரிவார்