தன்னால் தான் எல்லாம் என்ற கர்வம்.. என்ன பலனைத் தரும்? ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
abinav vidhya theerthar

தெய்வீக கட்டளைகளை என்றுமே மீறி கொண்டிருக்கும் அசுரர்களுடன் போர் புரியும் பொழுதெல்லாம் இறைவன் நம்முடைய அபரிதமான சக்தியாலும் ஆசிர்வாதத்தாலும் தேவர்களுக்கு வெற்றியையும் அதன் பலன்களையும் அளித்தார்.

தங்களது வெற்றியைக் கண்டு தேவர்கள் தற்பெருமை அடைந்தார்கள் உண்மையில் நாம் அடைந்த இந்த வெற்றி இந்த புகழ் எல்லாம் நம்முடையது என்று அவர்கள் நினைத்தார்கள் அவர்களுடைய அகந்தையை போக்கி அவர்களுக்கு புத்தியை புகட்ட இறைவன் திருவுள்ளம் கொண்டார்.

எனவே மிகவும் போற்றுதலுக்கு உரிய மிக பிரகாசமான ஒரு உருவத்தை தாங்கி ஒரு யக்ஷன் ஆக இறைவன் வந்தார்.

abinav vidhya theerthar

யக்ஷனை தேவர்களால் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் அக்னிதேவனிடம் சென்று நீங்கள் சக்தி மிக்கவராக இருக்கிறீர்கள் நீங்கள் அதனிடம் சென்று அதனுடைய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.

அதற்கு சம்மதித்த அக்னி யக்ஷனிடம் சென்றார். எல்லாவற்றையும் பற்றி முன்பே அறியும் ஆற்றல கொண்ட தான் யக்ஷனிடம் சென்று யாவற்றையும் அறிய முடியும் என்ற கர்வம் அவரை பற்றிக் கொண்டது.

அதன் எதிரில் சென்று தனது சுயத்தை இழந்து பேசுவதற்கு கூட துணிவின்றி மௌனமாக நின்றார் அவரைப் பார்த்து யார் என்று கேட்டது யக்ஷன்.தான் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து கொள்பவன் படைக்கப்பெற்ற எல்லாவற்றைப் பற்றியும் நான் அறிந்து இருப்பவன் என்பதால் என்னை ஜாதவேதா என்று அழைப்பார்கள் என்று பதிலளித்தார் அக்னி.

இவ்விரு பெயர்களால் அழைக்கப்பட்ட தான் உயர்ந்து விளங்குவதாக அக்னி தன்னைப் பற்றி தானே பெருமையோடு கூறிக் கொண்டார் தட்சனிடம் இவ்வளவு பிரசித்தமான பெயர்களையும் ஆற்றலையும் கொண்டுள்ள உனக்கு இருக்கும் திறமை என்ன என்று கேட்டது.

இந்த உலகத்தில் உள்ள அத்தனை பொருட்களையும் என்னால் எரிக்க முடியும் என்று பெருமைப்பட்டுக் கொண்டார் அப்படியா அப்படியென்றால் இந்த சிறிய புல்லை எரி என ஒரு சிறிய புல்லை அக்னியின் முன் வைத்தது யக்ஷன்.

இந்தப் புல்லை நீ அழித்துவிடு பார்க்கலாம் அப்படி அதை எடுக்க அழிக்க முடியவில்லை என்றால் உன் கர்வத்தை நீ விட்டு விட்டு எல்லா இடங்களிலும் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து விடுவேன் என்று ஜம்பம் அடித்துக் கொண்டு இருப்பதையும் விட்டுவிடு என்று கூறியது

மிகுந்த உற்சாகத்துடன் அந்த புல்லை எரிக்கசென்றார் அக்னி ஆனால் அவரால் அந்த புல்லை எரிக்க முடியவில்லை தான் கூறிய தனது திறமையை நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைந்ததாலும் வெட்கத்தாலும் மௌனமாக தேவரிடம் திரும்பி வந்தார்.

அது என்ன என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார் பிறகு தேவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி வாயு பகவானை அணுகி நீங்கள் அதனிடம் சென்று அதைப் பற்றி தெரிந்து கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள்.

வாயும் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி யக்ஷனிடம் சென்றார் யார் நீ எனக் கேட்டதற்கு அதற்கு அவர் நான் வாயு. எல்லா இடங்களிலும் காற்றை எடுத்துச் செல்பவன் நான்தான் ஆகாசத்தில் சஞ்சாரம் செய்வதால் மாதரிஷ்வா என்று அழைக்கப்படுகிறேன் என்று கூறினார்

இவ்வளவு பெயர்களையும் மகிமையும் கொண்ட உன்னுடைய திறமை என்ன என்று கேட்டது உலகிலுள்ள எப்பேர்பட்ட பொருளையும் ஊதித் தள்ளிவிடுவேன் என்று கர்வத்துடன் கூறினார் வாயு. வாயுவின் முன் சிறு புல்லை எடுத்து போட்டு இதனை வாயால் ஊதி தள்ளி உன் திறமையைக்காட்டு என்றது யக்ஷன் அந்தப் புல்லின் மீது முழு சக்தியும் உற்சாகமாக செலுத்தினார் வாயுதேவன்

ஆனால் அந்த புல்லை சிறிது கூட அசைய வைக்க முடியவில்லை தோல்வியால் மனமுடைந்த வாயு தேவர்களிடம் சென்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டார் யக்ஷன் யார் என்று விஷயத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.

தேவர்கள் தங்கள் அரசனான இந்திரனிடம் சென்று நீங்கள் சென்று அவற்றைப் பற்றி அனைத்து விஷயங்களும் தெரிந்து கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் இந்திரனும் சரி என்று அதை நோக்கிப் போனான் அவரது பார்வையில் இருந்து யக்ஷன் மறைந்து விட்டது.

abinav vidhya theerthar

இந்திரனது அகங்காரத்தை அடியோடு ஒழிக்க தான் இறைவன் இந்திரனை சந்திப்பதற்கு கூட மனமின்றி மறைந்துவிட்டார் அக்னி பகவானும் வாயு பகவானுக்கும் அதனோடு சிறிது நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் இந்திரனுக்கு அது கூட கிடைக்கவில்லை இதனால் தனது அகங்காரம் முழுவதும் நீங்கப் பெற்றவராய் இந்திரன் தான் இருந்த இடத்திலேயே பிரமித்துப் போய்விட்டான் மற்ற தேவர்களிடம் திரும்பிப் போகாமல் அதைப் பற்றி சிந்திக்க தொடங்கினான்.

அந்த இடத்தில் விடாது யக்ஷனைப் பற்றி சிந்தைனை செய்யவே சக்தி அவன் முன் தோன்றினாள் அவள் என்றும் சிவபெருமானுடன் இணைந்து இருப்பவள். அதனால் அவளிடம் இந்திரன கேட்டான் வந்தது யார் என்று.

அது பிரம்மம் என்று கூறினாள் அசுரர்களை வெற்றி கொண்டது இறைவன் தான் நீங்கள் எல்லோரும் அவருடைய வெறும் கருவிகள் தான் உங்களால் தான் வெற்றி அடைந்தோம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சக்தியின் கூற்றைக்கேட்ட இந்திரன் முதலான தேவர்கள் தங்கள் கர்வத்தை விட்டொழித்தார்கள்

இறைவனாக அவர்கள் முன் தோன்றியதால் அக்னியும் வாயும் ஒருபடி மேலே சென்று இந்திரன் உண்மையை அறிந்து கொண்டதால் அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் முதன்மையானவர்கள் ஆனார்கள்.

அவர்கள் வெற்றியும் புகழும் இறைவனால் ஏற்படுகின்றன எனும் போது சாமானியர்களை பற்றியும் அவர்களது வெற்றியையும் பற்றிக் கூறுவதற்கு என்ன இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.