December 6, 2025, 3:27 AM
24.9 C
Chennai

எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் விவேகம் உள்ளது! ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar

சகோதரர்கள் தங்கள் விடுமுறையை கழிப்பதற்காக மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா வந்தார்கள். அவர்கள் தங்கியிருந்தது ஒரு பயணியர் விடுதி சில நாட்கள் தங்கி சுற்று வட்டாரத்தில் இருந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்தார்கள்.

ஓர் இரவில் அவர்கள் களைப்பால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது பல வீடுகளும் கட்டிடங்களும் பலத்த சேதமடைந்தன.

சகோதரர்கள் தங்கியிருந்த விடுதியின் தளம் இடிந்து வீழ்ந்ததில் அவர்கள் உடல் நசுங்கி இறந்து இருக்க வேண்டும் ஆனால் தெய்வாதீனமாக படுக்கையில் இருந்த ஒரு மேஜை கூடத்தின் ஒரு பகுதியைக் கீழே விழாமல் தாங்கி கொண்டதால் அவர்கள் உயிர் பிழைத்தார்கள்.

தூண் க்ரிக் என்ற சப்தம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பதை கேட்டார்கள் சகோதரர்கள். இன்னும் சில வினாடிக்குள் உத்திரம் தங்கள் மேல் சாய்ந்து விடும் என்பதை உணர்ந்தார்கள்.

அவர்களைத் தேடி உதவி வரும் வரையில் அங்கு இருப்பது பெரும் ஆபத்தினை விளைவிக்கும் என்பதை அறிந்து உடனே அவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியே வருவதற்கு முயற்சித்தார்கள்.

படுக்கை அறையை விட்டு வெளியே வருவதற்கு இரண்டு பக்கங்களிலும் கதவுகள் இருந்தன அவற்றோடு கதவில் இடிபாடுகளில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றிக்கொண்டது தீச்சுவாலை மெல்ல மெல்ல மற்ற இடங்களுக்கு பரவ ஆரம்பித்தது.

அவர்கள் கதவருகே இருந்த கண்ணாடி ஜன்னல்களை எல்லாம் விழுந்து நொருங்கியதால் தரையில் கண்ணாடித் துகள்கள் சிதறி கிடந்தன சகோதரர்களில் ஒருவன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கதவின் வழியாக ஓட்டமாக ஓடித் தப்பித்துக் கொண்டான்.

இருந்தாலும் உடம்பில் ஏற்பட்ட காயங்களால் அவன் துடிதுடித்தான் அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பல வாரங்கள் கழித்தே தீவிர சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்தான். இரண்டாவது சகோதரன் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் வாசல் வழியே செல்வதால் உண்டாகக் கூடிய அபாயத்தை அறிந்துகொண்டு இரண்டாவது கதவின் வழியாக வெளியே ஓடிவந்தான் கீழே சிதறிக் கிடந்த கண்ணாடித் துகள்கள் அவன் பாதங்களை பதம் பார்த்தது அவனும் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.

மூன்றாவது சகோதரன் இதற்கு மேல் இங்கிருப்பது பைத்தியக்காரத்தனம் தீ ஜுவாலை எரிந்துகொண்டிருக்கும் வாசல் பக்கம் சென்றால் நிச்சயம் தீக்காயங்கள் ஏற்படும் அவ்வழியே சொல்வது முட்டாள்தனமானது மற்றொரு வாசல் வழியாகத்தான் வெளியேற வேண்டும் ஆனால் அங்கே சிதறிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் ஒட்டாமல் இருப்பதற்காக நான் என் கால்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

உடனே கட்டிலில் இருந்த படுக்கை விரிப்பை எடுத்து இரண்டு சிறு துண்டுகளாக கிழித்து அவற்றை ஒவ்வொரு பாதத்திலும் சுற்றிக் கொண்டான் மிகச் சீக்கிரமாக அவர் செயல்பட்டதால் எல்லாமே சில வினாடிகளில் முடிந்து வெளியேறுவதற்கு அவன் தேர்ந்தெடுத்த கதவு வழியே எவ்வித காயமும் இன்றி சௌகரியமாக வெளியே வந்தான்.

அந்த சகோதரர்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் படுக்கை அறையிலே விழுந்து கிடக்க முடியாது அங்ஙனமே ஒருவன் எந்த காரியத்திலும் ஈடுபடாமல் சும்மாயிருக்க முடியாது ஒருவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிற்கும் விளைவுகள் என்பவை நிச்சயம் இருக்கும்.

அதர்ம காரியங்களை செய்து ஒருவன் வெற்றி பெற்றிருந்தால் அது பிற்காலத்தில் பலவித கஷ்டங்களை ஏற்படுத்தும். அவன் நரகத்தில் அல்லது வயதான காலத்தில் அனுபவித்தாக வேண்டும்

இப்படி பட்ட ஒருவனுடைய நடத்தையை தீயால் சூழப்பட்ட வாசல் வழியே ஓடி வந்த அவனுடைய நடத்தைக்கு ஒப்பிடலாம் நல்ல செயல்களை செய்பவன் சுவர்க்கத்தை அடைந்து இன்பத்தை பெறுவான் மீண்டும் பிறக்கும் போது அவன் நல்ல உயர் குலத்தில் பிறப்பான்

எப்படி இருந்தாலும் அவன் மீண்டும் பிறவி எடுக்கத்தான் வேண்டும் புண்ணியத்தை சம்பாதித்துக் சம்சார பந்தத்தில் சிக்கிக்கொண்டு துன்பப்படுகிறான் அப்படிப்பட்டவனுக்கு உதாரணமாக இரண்டாவது சகோதரனுடைய செயலை ஒப்பிட்டுக் கூறலாம்

தீப் பழம் போல் காட்சி தந்த வாசல் வழியே சென்ற இடத்தில் எந்தவித முன்னெச்சரிக்கையும் தேவைப்படவில்லை அதர்ம வழியில் செல்வதை போல அது மிகச் சுலபமான வழியாகும் ஆனால் துன்பங்களில் ஆனவன் பிறகு வருத்தப்பட வேண்டியிருக்கும் தர்ம வழியில் செல்பவன் எப்படி தனது மனதையும் இந்திரியங்களையும் தன் மனதில் வைத்திருக்க முயற்சி தான் அப்படி இரண்டாவது வாசல் வழியாக வெளியே சென்றவர் சிறிது கஷ்டப்பட வேண்டியிருந்தது

செயல்களினால் வந்த அவன் எப்படி செயலாற்றுவது என்பதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார்கள் ஒருவர் தான் செய்யும் எல்லா செயல்களையும் மற்றும் அவற்றின் விளைவுகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு பலனில் பற்று வைக்காமல் தன் கடமைகளை ஆற்றி கொண்டு வர வேண்டும் இவ்வாறு கழுத்தில் மாட்டிக் கொள்ளாமல் செயலாற்றும் முறை தான் கர்ம யோகமாகும் கர்ம யோகத்தை செய்பவன் மூன்றாவது சகோதரன். அவன் இரண்டாவது சகோதரன் என்ற பாதையில் சென்றாலும் எந்த வித காயம் ஏற்படாதவாறு அவன் பார்த்துக் கொண்டான்

புத்திசாலியான அவன் எவ்வாறு தன் கால்களை துணியால் கட்டிக் கொண்டு தன்னை பாதுகாத்துக் கொண்டான். விளையும் பலன்களையும் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பது மூலம் தன்னை கர்மங்களுக்கு ஆட்படாதவாறு பார்த்துக் கொள்கிறார் கர்மயோகி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories