திருவோணம் !
எம்பெருமான் வாமன ரூபமாக வந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூவடி நிலம் கேட்டு
பெற்று, மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு
அனுப்பினார்.
அப்போது மகாபலி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டார். “வருடம் ஒரு முறை நீ பிறந்த
திருவோணத்தில், நான் என் நாட்டிற்கு வந்து எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு
வாழ்வதை பார்த்து செல்ல வேண்டும்” என்பதுதான் அது. எம்பெருமான் அவ்வாறே அருள,
மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு தோறும் மக்களை காண வரும் இந்த “ஓணம்” நாளை,
“திருவோணம்” என்று போற்றி விழாவாக கொண்டாடுகிறார்கள்.
மகாபலி சிறந்த விஷ்ணு பக்தராம். எனவேதான் எல்லோரும் எம்பெருமான் திருவடியை நம்
தலையிலே தரிப்பது எப்போதோ ? என்று தவம் கிடக்க, அதனை தான் எம்பெருமானுக்கு
அளித்த தானத்தின் வாயிலாக உரிமையுடன்கே ட்டு பெரும் பாக்கியம் மகாபலி
சக்கரவர்த்திக்கு கிடைத்தது.
நாரதர் ஒரு முறை எம்பெருமான் “ஸ்ரீ ஹரி ” எங்கு உள்ளான் என்று எல்லா
இடத்திலும் தேடியும் கிடைக்காமல், எம்பெருமானிடமே வேண்ட, அவர் இருக்கும்
இடத்தை காண்பித்தாராம். எங்கே தெரியுமா ? மகாபலி சக்கரவர்த்தியின் பாதாள
அரண்மனையை காவல் காத்து நின்றாராம் எம்பெருமான். தன பக்தர்கள் மேல் அவ்வளவு
வாத்சல்யம் கொண்டவன் எம்பெருமான். ஆம் ! அதனால் தானே அவன் ” பக்த வத்சலன்”
என்று கொண்டாடபடுகிறான் !
மஹாபலி சக்கரவர்த்தி திருவடிகளே சரணம் ! வாமனனாக தோன்றி திருவிக்ரமனாக ஓங்கி
உலகளந்த எம்பெருமான் திருவடிகளே சரணம் !
அனைவருக்கும் “ஓணம்” நல வாழ்த்துக்கள் !




