கோவில் – திருவரங்கம்
திருப்பவித்ர உற்சவத்தின் இரண்டாம் திருநாள் அங்கோ பாங்க சேவை (பூச்சாண்டி
சேவை) இன்று.
மையோ! மரகதமோ!மறிகடலோ! மழை முகிலோ!ஐயோ! இவன் வடிவு! என்பதோர் அழியா
அழகு உடையான்!
தோடவிழ் நீலம் மணங்கொடுக்கும்
சூழ் புனல் சூழ்க்குடந்தைக் கிடந்த
சேடர் கொலென்று தெரிக்க மாட்டேன்
செஞ்சுடராழியும் சங்கும் ஏந்தி
பாடக மெல்லடியார் வணங்கப்
பன்மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்
*அச்சோ ஒருவரழகியவா*
என்னும் படி,
ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்
“ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்”
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் “முடிவில்ல தோர் எழில்”
நீல மேனி! ஐயோ! நிறை கொண்டதென் நெஞ்சினையே
என்று திருப்பாணாழ்வாரின் திருமொழியை நமக்கு காட்டுவதாய் திருவரங்கன் தன்
திருப்பவித்ர உற்சவத்தின் இரண்டாம் திருநாளில்,
உலகங்கள் அனைத்தையும் உண்டு விழுங்கி விட்டு (ஞாலம் ஏழும் உண்டான்) பாலகனாய்
சிறு இலையின் மேல் தவழ்ந்து வருகிறான் கண்ணன், ஊழிக் கூத்தின் கடைசியில்,
பாலகன் என்ற உருவகம் வளர்ச்சியின் தொடக்கத்திற்கு திரும்பும் நிலையைக்
குறித்து, கள்ளமற்ற குழந்தையாக உலகின் தோற்றமும் முடிவும் அவனுக்கு சிறு
குழந்தையின் விளையாட்டுப் போல என சுட்டிக் காட்டியபடி,
*தன் திருமேனியில் ஸர்வ லோகங்களையும் காட்டி தானே பரத்துவம் என்பதை இங்கே
காட்டி அருளிகிறான்* அன்று யசோதைக்கு தன் திருவாயில் ஸர்வ லோகங்களையும் காட்டி
அருளியதை போன்றே இன்றும் நமக்கும் கருணை கொண்டு நம் அரங்கன் அங்கோ பாங்க சேவை
(பூச்சாண்டி சேவை) கொள்கிறார்.
இதையே கம்பரும்,
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலை நிறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.
என்று அருளி செய்கிறார்.
அங்கோ பாங்க சேவை (பூச்சாண்டி சேவை) அலங்காரம் பார்ப்பவர்களுக்கு அச்சம்
ஏற்படுவது போல் காட்சி அளிப்பதால் பூச்சாண்டி சேவை என்று அழைக்கப்படுகிறது.
இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அங்கோ பாங்க சேவை (பூச்சாண்டி சேவை)
பக்தர்கள் தரிசிக்கலாம். அதன்பின் நம்பெருமாள் இரவு 8 மணிக்கு மூலஸ்தானத்தில்
இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்தக்கு எழுந்தருளுகிறார்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்




