Home ஆன்மிகம் விநாயகர் சதுர்த்தி: விநாயகரும் நவகிரகங்களும்..!

விநாயகர் சதுர்த்தி: விநாயகரும் நவகிரகங்களும்..!

Screenshot_2020_0820_195131

விக்னங்களை தீர்க்கும் விநாயகரை நவக்கிரகங்களும் வணங்கி பல சிறப்புகளை பெற்றிருக்கிறார்கள். நவகிரகங்களின் தலைவராய் விநாயகர் விளங்குகிறார். விநாயகரின் பக்தர்களை நவகிரகங்கள் அருள்புரிந்து காக்கின்றார்கள்.

சனி பகவான்:

எல்லோரையும் தவறாமல் பிடித்து பாவங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்குவதில் சனிபகவானுக்கு நிகர் யாருமில்லை சனிபகவான் பிடிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது ஆனால் விநாயகரையும் ஆஞ்சநேயரையும் சனிபகவானால் நெருங்க முடியவில்லை. விநாயகப் பெருமானை சனிபகவான் சில நாழிகையில் பிடிக்கும் காலம் வரும்போது சனி பகவான் விநாயகரை அணுகினார். நாளை வா என்று முதுகில் எழுதிவைத்து காட்டினார். இதனால் சனிபகவான் எப்பொழுது வந்தாலும் நாளை வா நாளை வா என்பதை பார்த்து திரும்பி செல்வதைத் தவிர வேறு வழியில்லை சனிபகவானுக்கு. ஆதலால் உங்களை வணங்கும் பக்தர்களையும் நான் பிடிக்க மாட்டேன் என்று வாக்கு கொடுத்தார்.

கேது பகவான்

ஞானத் தன்மையை தரக்கூடிய சக்தி பெற்றவர் கேது பகவான் பன்னிரண்டாம் இடத்தில் ஜாதகத்தில் இவர் அமர்ந்திருந்தாள் முக்தி யோகம் அதனால் பிறவித் துன்பம் அறுபடுகிறது கேதுபகவான் கேந்திரம் திரிகோணம் போன்ற இடங்களில் அமர்ந்து குரு பார்வை பெற்றிருந்தாலும் குருவுடன் கூடியிருந்தாலும் ஆன்மீக எண்ணங்கள் நாளுக்கு நாள் வளரும் இத்தகைய பெருமை உள்ள கேது பகவானுக்கு நாயகராக விநாயகப் பெருமான் இருக்கிறார் அதனால் விநாயகர் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி ஆகிய தினங்களில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டு ஏழைகளுக்கு தானங்கள் செய்வதால் ஆன்மீக எண்ணம் ஓங்கி கேது பகவானால் உண்டாகும் தோஷங்கள் விலகும்.

ராகு பகவான்

ராகு பகவானால் ஏற்படக்கூடிய கஷ்டங்களும் தீமைகளும் வெள்ளிக்கிழமை அன்று அம்மனை வழிபடுவதன் மூலமும் விநாயகரை வழிபடுவதன் மூலமும் நீங்குகின்றன

Screenshot_2020_0820_195047

குரு பகவான்

இந்திரன் ஒரு முறை கௌதம முனிவரின் பத்தினியான அகலிகை மீது ஆசை கொண்டு தவறிழைத்ததால் கௌதம முனிவரால் ஆயிரம் கண்களை மேனியில் அடைந்தான். அவமானம் அடைந்த இந்திரன் தாமரை தண்டில் ஒளிந்துகொண்டான் இதனை அறிந்து தேவர்களும் நாரதரும் கௌதம முனிவரிடம் சாப விமோசனம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். உடனே மனமிரங்கிய கௌதம முனிவர் தேவ குருவை அழைத்து கணேச மந்திரத்தை உபதேசம் செய்தால் போதும் என விமோசனம் அருளினார். தேவகுரு இந்திரனை அழைத்து கணேச மந்திரத்தை உபதேசம் செய்தார். உடனே உடலிலிருந்த ஆயிரம் கண்களும் நீங்கின.

சந்திரபகவான்

கயிலைக்குச் சென்றிருந்த சந்திரன் விநாயகரின் முகத்தை கண்டு சிரித்துவட்டார் உடனே விநாயகர் உன் உடலில் உள்ள அழகு நாளுக்கு நாள் குன்றிப் போகும் என்று சாபமிட்டார் உடனே சந்திரன் தன் தவறுக்கு மன்னிக்கும்படி விநாயகரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார் மனமிரங்கிய விநாயகர் இந்திரனை அழைத்து கணேச மந்திரத்தை உபதேசிக்க செய்தார் உபதேசம் பெற்ற சந்திரன் கங்கை ஆற்றின் தென்கரையில் சர்வசித்தி நகருக்கு சென்று கணேச மந்திரத்தை பல ஆண்டுகள் சொல்லி தன் உடலில் மீண்டும் பழைய அழகினை திரும்பப் பெற்றான்.

செவ்வாய் பகவான்

ஒரு முறை பரத்வாஜ முனிவர் ஆற்றில் நீராடச் சென்றபோது அழகிய பெண்ணை கொண்டு ஆசை கொண்டார் அதனால் ஒரு குழந்தை பிறந்தது நிலத்தில் இருந்த அந்த குழந்தையை பூமாதேவி எடுத்து வளர்த்தால் அதனால் அந்த குழந்தைக்கு பூமி மகன் நிலம் என்று பெயர் உண்டாயிற்று இந்த குழந்தையை செவ்வாய் ஆகும் செவ்வாய் வளர்ந்து தந்தையைப் பற்றி கேட்க பூமாதேவி பரத்வாஜ முனிவரிடம் அழைத்துச் சென்று இவன் உங்கள் மகன் என்று கூறினாள் பிறகு மகனுக்கு கற்பிக்க வேண்டிய கலைகள் அனைத்தையும் கற்பித்தார் விநாயகக் கடவுளின் வேத மந்திரத்தை உபதேசித்தார் தந்தை சொல்லை ஏற்று எண்ணற்ற ஆண்டுகள் மந்திரத்தை உருவேற்றி தவம் செய்தார் செவ்வாய்பகவான் விநாயகர் தோன்றி பல வரங்கள் தந்து கிரக பதவியும் அளித்தார் விநாயகர் அருள் புரிந்த நாள் சதுர்த்தி ஆகும் செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்திகளில் விநாயகரை வணங்கினால் பிறவியில் செய்த தீவினைகள் அகலும்.

புதபகவான்

கல்வி அறிவு பேசும் திறன் ஆகிய தகுதிகளை அளிக்கக்கூடியவர் புதன். புதன்கிழமை விஷ்ணுவை வணங்கினால் எல்லாவிதமான நலத்தையும் புதன் அருளுவார் புதன்கிழமை தோறும் விநாயகப்பெருமானை அருகம்புல்லால் வணங்கி வந்தால் பல நன்மைகளை பெறலாம்.

சுக்கிர பகவான்

கலைகள் தருகின்ற சக்தியுடைய சுக்கிர பகவான் திரைப்படத் துறை தொழில் துறை ஆகிய துறைகளில் முன்னேற இவரின் அருள் மிகவும் முக்கியம் வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிரனையும் லக்ஷ்மியும் வணங்க நமக்கு உயர்வுகள் கூடிக் கொண்டே போகும் வெள்ளிக்கிழமையில் விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் சுக்கிரன் எண்ணற்ற அருளாசிகள் வழங்கி புகழையும் பொருளையும் தருவார்

சூரிய பகவான்

மற்றவர்கள் மதிக்கும் நிலைமையும் அனைத்து வசதிகளும் தரக்கூடிய தகுதி கொண்ட சூரிய பகவான் ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி சூரிய நமஸ்காரம் செய்தால் துன்பங்கள் எதுவும் நெருங்காது அன்று விநாயகர் புராணத்தை படித்தாலும் கேட்டாலும் சூரிய பகவானின் அருளும் கிடைக்கிறது.

தினமும் முதலில் விநாயகப் பெருமானையும் நவக்கிரகங்களையும் வணங்கி வந்தால் எல்லா நன்மைகளும் சேரும் கவலைகள் நீங்கும்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »