29 C
Chennai
திங்கட்கிழமை, நவம்பர் 30, 2020

பஞ்சாங்கம் நவ.30- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - நவ.30ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~15 (30.11.2020) திங்கட் கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...
More

  நவ.30: இன்று குருநானக் ஜெயந்தி!

  கார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  டிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..!

  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.

  திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  கண்ணாடி உடையில் அப்பட்டமாக காட்டும் ஆண்டிரியா – ஷாக் ஆன ரசிகர்கள்

  தமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என திறமையானவர் ஆண்டிரியா. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தாலும் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடந்து தனது கவர்ச்சியான...

  ஒரே ஒரு பாட்டுதான்… ஆனா முழு சம்பளம்… ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ஷடம்தான்..

  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில், இந்தியில் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது....

  அந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்

  மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...

  விரைவில் அரசியல் அறிவிப்பு – ரஜினிகாந்த் பேட்டி

  நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், பல காரணங்களை கூறி அவர் அரசியலுக்கு வருவதை தட்டிக்கழித்து வந்தார். தன்னுடைய உடல் நிலையையும், கொரோனா பரவலையும் காட்டி அரசியலுக்கு...

  விநாயகர் சதுர்த்தி: அகத்தில் விளக்கேற்றும் அகவல்!

  aouvaiyar

  விநாயகர் அகவல் என்பது இந்து தெய்வமான கணேஷின் பக்தி கவிதை. இது 10 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தின் போது தமிழ் கவிஞர் ஔவையார் இறப்பதற்கு சற்று முன்பு எழுதப்பட்டது. இது அவரது மிகப் பெரிய கவிதை என்று கருதப்படுகிறது. இந்து ஆன்மீக நம்பிக்கை மற்றும் நடைமுறை பற்றிய அகவலின் விளக்கத்தையும், தெய்வத்திற்குக் காரணமான மனித வாழ்வின் போதனைகளின் அம்சங்களையும் பயன்படுத்துகிறது

  விநாயகர் அகவல் விநாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன் யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது.

  சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இப்பூவுலகிற்கு வந்த நோக்கம் முடிந்து கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானையில் ஏறி கயிலாயம் செல்லலானார். இதனையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் என்ற சுந்தரரின் உற்ற தோழர் தானும் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பி தனது குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி சுந்தரரை பின்பற்றி அவருடன் கயிலாயம் செல்லலானார்.

  இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கயிலாயம் செல்ல விரும்பினார். இதற்காக தான் செய்து கொண்டிருந்த விநாயகர் பூஜையை அவசர அவசரமாக செய்யலானார். அப்பொழுது விநாயகர் பெருமான் நேரில் தோன்றி “ அவ்வையே ! நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூஜைகளைச் செய்.

  அவர்களுக்கு முன்னே உன்னை நான் கயிலாயத்திற்கு கொண்டு சென்று சேர்க்கிறன் ” என்று கூறினார். அவ்வையாரும் நிதானமாக பூஜைகளைச் செய்து விநாயகர் அகவலையும் பாடினார். விநாயகரும் தான் கூறியபடி அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரருக்கும், சேரமானிற்கும் முன்பாக கயிலாயத்தில் சேர்ப்பித்தார்.

  vinayakar

  விநாயகர் அகவல் விநாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன் யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது.

  எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் சகல வளமும் சகல நலமும் பெறுவோமாக!

  விநாயகர் அகவல் – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு)

  சீதக் களபச் செந்தா மரைப்பூம்
  பாதச் சிலம்பு பலவிசை பாடப்
  பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
  வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
  பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

  வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
  அஞ்சு கரமும் அங்குச பாசமும்
  நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
  நான்ற வாயும் நாலிரு புயமும்
  மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

  இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
  திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
  சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
  அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
  முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

  இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
  தாயா யெனக்குத் தானெழுந் தருளி
  மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
  திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
  பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

  குருவடி வாகிக் குவலயந் தன்னில்
  திருவடி வைத்துத் திறமிது பொருளென
  வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
  கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
  உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

  தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
  ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
  இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
  கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
  இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

  தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
  மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
  ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
  ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
  ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

  பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
  இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
  கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
  மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
  நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

  குண்டலி யதனிற் கூடிய அசபை
  விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
  மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
  காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
  அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

  குமுத சகாயன் குணத்தையும் கூறி
  இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
  உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
  சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
  எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

  புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
  தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
  கருத்தினில் கபால வாயில் காட்டி
  இருத்தி முத்தி யினிதெனக் கருளி
  என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

  முன்னை வினையின் முதலைக் களைந்து
  வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
  தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
  இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
  அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

  எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
  அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
  சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
  சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
  அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

  கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
  வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
  கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
  அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
  நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

  தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
  வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  நவ.30: இன்று குருநானக் ஜெயந்தி!

  கார்த்திகை பௌர்ணமி குருநானக் ஜெயந்தி. குருநானக் ஜெயந்தி குறித்து ஆர்வமூட்டும் செய்திகளை அறிந்து கொள்வோம்.

  கண்ணாடி உடையில் அப்பட்டமாக காட்டும் ஆண்டிரியா – ஷாக் ஆன ரசிகர்கள்

  தமிழ் சினிமாவில் பாடகி மற்றும் நடிகை என திறமையானவர் ஆண்டிரியா. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்தாலும் பாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடந்து தனது கவர்ச்சியான...

  ஒரே ஒரு பாட்டுதான்… ஆனா முழு சம்பளம்… ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ஷடம்தான்..

  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். கடந்த சில வருடங்களாக அவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில், இந்தியில் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது....

  அந்த காரணத்திற்காக என்னை தனுஷ் படத்திலிருந்து தூக்கிவிட்டனர் – நடிகை கலக்கம்

  மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி சுந்தர் சி இயக்கத்தில் ஆக்‌ஷன் படத்தில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜகமே தந்திரம்...
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,040FansLike
  78FollowersFollow
  73FollowersFollow
  969FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சுபாஷிதம்: ஆபத்தில் தைரியம்!

  சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்: பி.எஸ்.சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்46 ஆபத்தில் தைரியம்!செய்யுள்:தாவத் பயாத்தி பேதவ்யம் யாவத் பயமனாகதம் |ஆகதம் து பயம் வீக்ஷ்ய...

  டிச.2 அன்று… தென்மாவட்டங்களில் கனமழை..!

  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியலை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியலை ஒட்டியும் இருக்கும்.

  திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  ராதையும் கிருஷ்ணனும்! கார்த்திகை பௌர்ணமி மகிமை!

  கார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்

  திருவண்ணாமலையில் பக்தர்கள் கோஷத்துடன் ஏற்றப்பட்ட மகாதீபம்!

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 20 ஆம் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  பழனி கோயிலில் தீப விழா! நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்!

  திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.

  ஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்? எதற்கு?

  இந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட

  ஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை!

  அதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்

  கருணைக்கு மறுபெயர் கசாப்!

  கருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...
  Translate »